வாழ்க்கையின் பல நிகழ்வுகள்
அபத்தமானவையே.
நிகழும் அந்தக் கணத்தில் அவை
சாதாரணமாகத் தோன்றும் .
ஆனால் யோசித்துப் பார்க்கையில்
அதில் உள்ள அபத்தம் புரியும்.
இதுதான் இருத்தலியல் என்பதா என்பது
எனக்குத் தெரியாது!
பின் வரும் கதை வாழ்க்கையின் அந்த
அபத்தத்தை வெளிக்காட்டுகிறது.
கதை---
ரயிலில் வழக்கம் போல் கூட்டம்.
அந்த s-2
கோச் வாசலில் டி.டி,இ யைச் சுற்றிக் கூட்டம் .
ஏதாவது படுக்கை கிடைக்காதா என முயலும் கூட்டம்.அவர்
சொல்லி விட்டார்,எந்த வாய்ப்பும் இல்லை என்று.
அப்படியும் இருவர் வண்டி புறப்பட்டதும் அந்தப் பெட்டியில்
ஏறி விட்டனர்.
ஏறி விட்டனர்.
டி.டி.இ யிடம் கெஞ்சிக் கூத்தாடி,கதவருகில் யாருக்கும்
தொந்தரவின்றி இருப்பதாகவும், ஏதாவது இருக்கை
ரத்தானால் தங்களுக்குக் கொடுக்கும்படியும் சொல்லி அனுமதி வாங்கி விட்டனர்.
ரயில் சென்று கொண்டே இருந்தது.
இரண்டு மணி நேரம் கடந்திருக்கும்.
திடீரென்று ஒரு அழுகுரல்.
பலர் பெட்டி நடு நோக்கி விரைந்தனர்.
படுக்கை 25,26 இல் ஒரு தம்பதி பயணம் செய்தனர்.
அந்தக் கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார்.
பலரும் பலயோசனைகள் சொன்னார்கள். கடைசியில் அந்தத்
தம்பதி அடுத்த நிலையத்தில் இறங்கி,வாடகைக் கார் பிடித்து ஊர் திரும்புவது என முடிவாயிற்று.
அடுத்த நிலையம் வந்தது .
அவர்கள் இறங்கினர்.
பெட்டியில் ஒரு கனத்த மௌனம்!
வண்டி புறப்பட்டது
காத்திருந்த அந்த இருவரும் டி.டி.இ யை அணுகினர்.
“சார்,ரெண்டு பெர்த் காலியாயிருக்கே!எங்களுக்குக்
கொடுங்களேன்!”
................................................................................................