தொடரும் தோழர்கள்

அழைப்பிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழைப்பிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

சென்னையை நெருங்கும் சுனாமி!

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஞாயிறன்று  ஒரு சுனாமி சென்னையைத் தாக்கப் போகிறது!

உலகத்தமிழ்ப் பதிவர்கள் ஆழிப்பேரலையென சென்னையில் அன்று கூடப் போகிறார்கள்.

இது அழிக்கும் சுனாமியல்ல;ஆக்கும் சுனாமி!

சிறு மழைத்துளியாகத் தொடங்கிய முயற்சி இன்று அனைவரின்  ஒத்துழைப்பினால், ஆழிப்பேரலையெனத் திரண்டு விட்டது.பல கட்ட ஆலோசனைக்குப் பின், பலரது உழைப்பின் பலனாக நிகழ்ச்சிக்கு இறுதி வடிவம் கொடுக்கப் பட்டு,மின் அழைப்பிதழ் தயாராகி விட்டது.------


  இது அனைவருக்கும் விடுக்கப்படும் தனிப்பட்ட அழைப்பு!

  ஏனெனில்    இது நம்  வீட்டு விழா!

ஆழிப்பேரலையெனத்  திரண்டு வாருங்கள் நண்பர்களே!

சந்திப்போம் சென்னையில்!

நெஞ்சில் தொடங்கிய நட்பு அன்று கண்களிலும் கனியட்டும்!

வாழ்த்துகள்..