தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 11, 2014

அகத்தியர் வருவாரா?



அகத்தியர் மீண்டும் வரவேண்டும்.

வந்தேயாக வேண்டும்.

நம் அனைவரின் பிரார்த்தனைகளும் அதுவாகவே இருக்கட்டும்.

ஏன் வரவேண்டும்?

எதற்காக வரவேண்டும்?

வந்து என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுகின்றன அல்லவா?

அந்நாளில்,மீனாட்சி அம்மைக்கும் சுந்தரேச்வரப் பெருமானுக்கும் திருமணம் நடந்தது
எங்கே?

மீனாட்சி ஆட்சி செய்த மதுரை நகரில்தான்.

அத்திருமணத்துக்கு,தேவர்கள்,முனிவர்கள்,மாந்தர்கள் என அனைவரும் மதுரையில் குழுமினால்,தென் தமிழகம் தாழ்ந்து வட திசை உயர்ந்து விடும்  என்பதால்,இறைவனால்,
வடக்கே சென்று இருந்து நிலத்தைச் சமப்படுத்துமாறு குறு முனி பணிக்கப்பட்டார்.

இப்போது அது போன்ற ஒரு நிலை அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி உருவாக இருக்கிறது.

உலகத்தின் எல்லாத் தமிழ்ப் பதிவர்களும் மதுரை மாநகரில் அன்று குழும இருக்கிறார்கள்.

அந்தச் சுமையில் தென் தமிழகம் தாழும் என்பது நிச்சயம்.

எனவே மீண்டும் அகத்தியர் வர வேண்டும்!

அகத்தியருக்குத் திருமணத்தை அவர் இருந்த இடத்திலேயே காணத்தந்து இறைவன் அருள் புரிந்தான்

சென்னையை விட்டு விலக இயலாத எனக்கு அது போல் விழாவின் காணொளியே ஆறுதலாகட்டும்.

விழா வெற்றி பெற இப்போதே வாழ்த்துகிறேன்

13 கருத்துகள்:

  1. உங்களையும் எங்களுடன் அழைத்துச் செல்லலாம் என்றல்லவா எண்ணியிருந்தோம்...? வர இயலாத சூழல் என்கிறீர்கள்... பின்னர் பேசுகிறேன். உங்களின் வாழ்த்துகளும நல்லாசிகளும் சேர்ந்தபின் விழா சிறக்கக் கேட்கவா வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  2. அய்யா..!
    பகிர்வுக்கு நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  3. பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    பதிவர் நிகழ்வை நல்ல கதையுடன் கூறிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இப்போ.... நீங்கள் தான் அகத்தியரா....?

    என்னமா யோசிக்கிறீர்கள்.....!!

    வாழ்த்தி வணங்குகிறேன் பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. சிம்பாலிக்கா சொல்லியிருப்பது அழகு.... ஆனால் நீங்கள் வரவில்லையென்பது வருத்தமே...

    பதிலளிநீக்கு
  7. வாத்தியார் பாலகணேஷ் அவர்களுடன் கண்டிப்பாக வருவீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... சூப்பரா ஐயா பாணியில் விழா விவரம்... அருமை.

    பதிலளிநீக்கு
  9. பதிவர் சந்திப்பு வெற்றி பெற எனது வாழ்த்துகள்...

    முடிந்தால் எனது அடுத்த பயணத்தின் போது சென்னையில் சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  10. அகத்தியர் வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் வரவேண்டும் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  11. சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், வடபுலம் உயர்ந்து தென்புலம் தாழ்ந்ததால் தெற்கே வந்து சமன் செய்ய இறைவனால் அகத்தியர் அனுப்பப்பட்டார் என்று படித்திருக்கிறேன். அவர் வடக்கே சென்றதாக கேள்விபட்டதில்லையே. இருப்பினும் தற்போது தெற்கே வலைப்பதிவர்கள் கூடும்போது தென் தமிழகம் தாழும்போது வட தமிழகத்தில் இருக்கும் தாங்கள் அகத்தியர் செய்த பணியை செய்துவிடுவீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு