சன்னல் வழியாகப் பார்க்கிறேன்
என்னைப் பார்க்கும் எண்ணற்ற முகமூடிகளை!
எத்தனை உணர்ச்சிகள்?-மகிழ்ச்சியாய்,கவலையாய்
,
எள்ளலாய்,வெறுப்பாய்.வேதனையாய்......
எண்ணிப்பார்க்கிறேன்..முகமூடிகளுக்குப்
பின் உள்ள
முகங்கள் எப்படி இருக்கும்?
முகமூடிகள் எதை மறைக்கின்றன?
முகங்கள் எல்லாம் ஏன்
முகமூடி அணிந்தே இருக்கின்றன?
உள்நோக்கிப் பார்த்தால்
நானும் அப்படித்தானே!
துயரங்களைப் புன்னகையால் மறைத்து
அருவருப்பை அன்பாக மாற்றிக்காட்டி
ஆம்!
நான் மட்டும் வேறா என்ன?
நானும் ஒருவன்தான் இக்கூட்டத்தில்!
உண்மை முகம் ஒருவரும் காட்டுவதில்லை
உணர்கிறேன் இதை நான் உண்மையாய்
ஆனாலும்
அறிய முடியவில்லையே அவர்கள்
உண்மை உள்ளப்போக்கை என்னால்!
உள்ளிருக்கும் முகம் காண
விருப்பமில்லையா?
போலி நாடகத்தின் உயிருள்ள பாத்திரமாகப்
போனதை விரும்புவதாலா?
வாழ்க்கை ஒரு நல்ல ஆசான்!
மனிதர்களை,அவர்கள் நடத்தையை
அப்படியே ஏற்றுக்கொள்ளக்
கற்றுக் கொடுத்திருக்கிறது.
இல்லையெனில்
ஏமாற்றமும் துயரும்தான்
என்றுமே மிஞ்சும்!
வாருங்கள்,!
இந்த மாறுவேடப்போட்டியில்
நாமும் நம் முகமூடிகளை அணிந்து
மகிழ்வோம்,சிரிப்போம்
உண்மைகளை மறைத்து!
இதுவே
வாழும் வழி!!!!
( an english poem by Srividhya Hariharan..........my daughter!)
வாழ்க்கை ஒரு நல்ல ஆசான்!
பதிலளிநீக்குமனிதர்களை,அவர்கள் நடத்தையை
அப்படியே ஏற்றுக்கொள்ளக்
கற்றுக் கொடுத்திருக்கிறது.//
உண்மைதான்... இல்லாவிட்டால் மனப் போராட்டம் தாம் மிஞ்சும்.. நல்ல கவிதை !
முகங்கள் எப்படி இருக்கும்
பதிலளிநீக்கு>>
முமூடி அணிந்தவருக்கே தெரியும்!!
இன்றைக்கு இதுவே வாழும் வழி என்பது உண்மை தான் ஐயா...
பதிலளிநீக்குSrividhya Hariharan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
இருந்தாலும் :
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (குறள் எண் 702)
தங்களின் பெண்ணிற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆங்கிலக் கவிதையைப் படிக்காவிட்டாலும் அது அருமையாய் இருக்கும் என உங்களின் தமிழாக்கம் சொல்கிறது. வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் திருமதி ஸ்ரீவித்யா ஹரிகரனுக்கு. ஏன் உங்களுக்கும் தான்!
பதிலளிநீக்குசிறப்பான கவிதை! மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குமுகமூடி மனிதர்கள் - எங்கு பார்த்தாலும்!
பதிலளிநீக்குநல்ல கவிதை.
உங்கள் மகளுக்கும் வாழ்த்துகள்.
இன்றைய சூழலில் பிரச்சனையின்றி வாழ
பதிலளிநீக்குமுகமூடி அணிதலும் அணிந்தவர்களை
அணிந்தபடி ஏற்றுக் கொண்டு வாழுதலுமே
சரியான வழி என மிகச் சரியாகச் சொல்லிப் போகும்
கவிதை அருமை.பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
பதிலளிநீக்குவாழ்க்கை ஒரு ஆசான். நுட்பமாகவும் ஆழமாகவும்.. ஆங்கிலத்தையும் உடன் சேர்த்திருக்கலாமே?
பதிலளிநீக்குஉங்கள் மகள் ஸ்ரீவித்யா ஹரிகரன் எழுதிய ஆங்கிலக் கவிதையையும் தந்து, அதற்குக் கீழ் இந்த தமிழாக்கத்தையும் தந்து இருக்கலாம். கவிதையின் மையக் கருத்து அருமை. தமிழாக்கமும் கவிதையின் மூலக் கருத்தை சிதைக்கவில்லை.
பதிலளிநீக்குவிரைவில் உங்கள் மகள் ஸ்ரீ வித்யா பெயரில் வலைப்பூவை எதிர்ப்பார்க்கிறேன்!
பதிலளிநீக்குத ம 8
நன்றாக வந்துள்ளது
பதிலளிநீக்குமுகமூடி முகங்கள்தான் வஹ்க்கைகளின் ப்ரச்சனகைகளை பல சமயங்களில் குறைக்கிறது என்று தோன்றுகிறது. தமிழ் வடிவம் நன்று ஆங்கிலத்திலும் படிக்க ஆவல்
பதிலளிநீக்குமுகமூடி இல்லாத நல்லகவிதை!
பதிலளிநீக்குவாழும் வழியை அருமையாக எடுத்துக்காட்டிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குமுகமூடிகளும் தேவைதான் .. உண்மை முகத்தின் குறைபடுகளை மறைக்குமே..!
நிகழ்காலத்திற்கேற்ற கவிதை. நிஜமுகம் எதுவென்றே தெரியாத வாழ்க்கை. அருமை.
பதிலளிநீக்குதங்கள் மகளுக்கு என் பாராட்டுக்கள்!
முகமூடி இல்லாம இவ்வுலகில் வாழ்வது கடினம்தான் !
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-