தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 17, 2013

மார்கழி பீடை மாதமா?



மார்கழி பிறந்து விட்டது.

வழக்கம் போல் எங்கள் குடியிருப்பின் காவல் தெய்வமான லக்ஷ்மிகணபதிக்குக் காலை பூஜைக்கான பிரசாதம் செய்ய,குடியிருப்போர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.



நானும் ஒரு நாள் பூஜையை ஏற்றுப் பிரசாதம் செய்ய எண்ணியுள்ளேன்.

வெண்பொங்கல் செய்ய உத்தேசம்!

மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று கூறுவார்கள்.

ஆனால் கீதாச்சாரியன்,”மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்என்று சொல்கிறான்.

அப்படியெனில் அது எப்படிப் பீடை மாதமாகும்?

கேள்வி எழுகிறது.

உங்களுக்குத் தலைவலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பையனை அழைத்துச் சொல்கிறீர்கள்மருந்துக்கடைக்குப் போய்த் தலைவலி மாத்திரை வாங்கி வாஎன்று.

பையனும் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை கேட்டுக் கடைக்கார் மாத்திரை கொடுக்கிறார்,

தைப் போட்டுக்கொண்டபின் உங்கள் வலி நீங்குகிறது.

தலைவலி மாத்திரை என்றால் என்ன?

தலைவலியை உண்டாக்கும் மாத்திரையா?

அல்ல.மாறாகத் தலைவலியை நீக்கும் மாத்திரை.

அதையே தலைவலி மாத்திரை என்கிறோம்.

அதே போல்,பீடை மாதம் என்றால்,பீடை ஏற்படுத்தும் மாதமல்ல;பீடையை நீக்கும் மாதம்!

மாதம் முழுவதும்,காலை எழுந்து நீராடி,திருப்பாவை மூலம் கண்ணனையும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மூலம் சிவபிரானையும் போற்றி மகிழ்ந்து அதன் மூலம் நம் பீடைகள் நீங்கப் பெறவேண்டும்.

இம்மாதத்தை சூன்யமாதம் என்றும் சொல்வர்.

சூன்யம் என்றால் பூஜ்யம்.

பூஜ்யனான இறைவனை அதிகாலை தொழும் மாதம் ஆதலால்,பூஜ்ய மாதம்!

இம்மாதம் தட்சிணாயனத்தின் கடைசி மாதம்.

ஒரு ஆண்டு என்பதை,தேவர்களின் ஒரு நாள் எனக் கொண்டால்,மார்கழி மாதம் என்பது அதிகாலைப் பொழுதாகும்.

இரவும் விடியலும் சந்திக்கும் வேளை!

எனவேதான் அதிகாலை இறைவனை வணங்க வேண்டும்.

நாளை ஆருத்ரா தரிசனம்.

களி கூட்டுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

16 கருத்துகள்:

  1. /// பீடை ஏற்படுத்தும் மாதமல்ல... பீடையை நீக்கும் மாதம்... ///

    சரியான... மிகச் சரியான விளக்கம் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மாகழி மாதத்தை பீடை மாதமென ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்கு சரியான விடை தந்துள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மாகழி மாதத்தை பீடை மாதமென ஏன் அழைக்கிறார்கள் என்ற கேள்விக்கு சரியான விடை தந்துள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. மார்கழி மாதத்திற்கு நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    மார்கழி மாதத்தை பீடை மாதம் என்ற சொற்பதத்திற்கு கொடுத்த விளக்கம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பீடை மாதம் அல்ல பீடை நீக்கும் மாதம்... அருமையான விளக்கம் ஐயா...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. மார்கழிமாதம் பீடையை ஏற்படுத்தும் மாதமல்ல பீடையை நீக்கும் மாதம்
    தலைவலி மாத்திரை போல் :))) அருமையான உவமை சொல்லி ஓர்
    உண்மையை விளக்கியுள்ளீர்கள் ஐயா .மிக்க நன்றி .நீங்களும் குடும்ப
    சகிதம் ஆருத்திரா நாளான இந்நாளில் மகிழ்வுற்றிருக்க வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு உதாரணம் சொல்லி புரிய வைத்தீர்கள்...

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. எளிமையான அருமையான விளக்கம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. எளிமையான விளக்கம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. Nice Post WISH YOU ALL THE BEST by http://wintvindia.com/

    பதிலளிநீக்கு
  13. மார்கழி மாதச்சிறப்பு மிக அருமை. பிள்ளையார் மிக அழகாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு