தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 03, 2013

குறை ஒன்றும் இல்லை!



இதோ ஒருவர்!
பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தவர்.
படுத்து விடவில்லை சோர்ந்து.
படித்தார்,பட்டங்கள் பெற்றார்
பணி புரிகிறார் இன்று
படிப்பிப்பவரா!
இவருக்குக்
குறை ஒன்றும் இல்லை!

மற்றொருர்!
மண்ணில் விழும்போதே
மடங்கிய கால்கள்
ஓடும் வாழ்க்கையில்
நடக்கவே முடியாதவர்
கால்களின் வலு கையில்
தொழிற்கூடத்தில் பணி
தொய்வின்றிச் செய்கிறார்
இவருக்குக் குறை ஒன்றும் இல்லை

கேளுங்கள் இவர் பற்றி
கேட்க இயலாதவர்
பேச்சும் இல்லாதவர்
இவர் வரையும் ஓவியங்கள்
உயிர் பெற்று உலவுமே
கவிஞன் சொன்னது போல்
தீ வரைந்தால் விரல் சுடும்
பூ வரைந்தால் மணம் மிகும்
இவருக்குக்
குறை ஒன்றும் இல்லை

இவன் உடல் ஊனமற்றவன்
வசதியானவன்
ஆனால்
பிறர் வாழப் பொறுக்காதவன்
அழுக்காறு அவா வெகுளி
 எல்லாம் நிறைந்தவன்
தீங்கு செய்வதே வாடிக்கையானவன்
இவனுக்கு குறை உண்டு!
இவன் மன ஊனம்!


உடல் ஊனம் ஒரு ஊனமல்ல
மனம் ஊனமானால்?!


சாதிக்கும்,சாதிக்கத் துடிக்கும்,வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி களுக்குச் சமர்ப்பணம்.





22 கருத்துகள்:

  1. மனம் ஊனமானால்...? எதுவுமே இருள் தான்-->மாற்று சோம்பேறிகளுக்கு...!

    பதிலளிநீக்கு
  2. பார்வையிழந்த ஒருவர் நூலகராய் பொறுப்பேற்றிருக்கும் செய்தி இன்று செய்தித் தாளில் படித்தேன். இன்றைய நாளுக்கு ஏற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    கடசியில் அருமையாக சொன்னிர்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சாதிக்கும்,சாதிக்கத் துடிக்கும்,வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் பாராட்டப்பட வேண்டியவர்களே.

    //உடல் ஊனம் ஒரு ஊனமல்ல; மனம் ஊனமானால்?!//

    கஷ்டம் தான். நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. "குறை ஒன்றும் இல்லை" வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சரியான நாளில் அருமையான கவிதை .. நன்றி

    பதிலளிநீக்கு
  7. அப்படிப் பார்த்தால் ஊனமில்லாத மனிதரே இல்லை உலகில்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான படைப்பு! உற்சாக மூட்டும் வரிகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. "மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம்; மனம் சாய்ந்து போனால்?..." என்ற பாடலை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. மாற்றுத் திறனாளிகளை வாழ்த்தி, மனம் ஊனமுற்றோரை சாடியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மனதைத் தொட்ட பகிர்வு.....

    மனம் ஊனமுற்றவர்கள்.... :(

    பதிலளிநீக்கு