ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
வாங்க பழகலாம்!!
எளியோரை வலியோர் வாட்டினால்
பதிலளிநீக்குவலியோரை வாட்ட வராது இன்று தெய்வம்!//
சரியே.
@பயணங்களும் எண்ணங்களும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இன்றைய நிலையை சரியாக சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குமனவலிமை இருந்தால் உடல் வலிமை தானே வரும். எனவே மனவலிமை பெறுவோம்.
அநீதியை தட்டிக்கேட்போம்
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்கு//எனவே மனவலிமை பெறுவோம்.
அநீதியை தட்டிக்கேட்போம்//
புதிய ஆத்திச்சூடியை அழகாக ஆரம்பித்தான் பாரதி”அச்சம் தவிர்” என்று.அச்சம் தவிர்த்தால் மனவலிமை வரும்.சிறுமை கண்டு பொங்கும் ரௌத்திரம் தானே வரும்.உங்கள் கருத்து முழுவதும் சரி.
நன்றி.
அருமையான கருத்துக்கள் . ஆங்காங்கே சாமான்ய மக்கள் தங்கள் உரிமைக்காக போராடும் செய்திகளை
பதிலளிநீக்குபடிக்கும் போது சிறு நம்பிக்கை பிறக்கின்றது . காலம் ஒரு நாள் மாறும் என்ற எண்ணம் வலுக்கின்றது . வாசுதேவன்
@vasu
பதிலளிநீக்கு//காலம் ஒரு நாள் மாறும் என்ற எண்ணம் வலுக்கின்றது .//
நிச்சயமாக.”கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்,காலம் மாறும்.”
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@vasu
பதிலளிநீக்கு"கட்டுண்டோம்,பொறுத்திருப்போம், காலம் மாறும்”
என் பதிலில் ’காலம்’ மறைந்து விட்டது!