தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

மஞ்சள் துண்டு எங்கே?!!

நேற்று முதல் இதே கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கிறது மனதில்—எங்கே மஞ்சள் துண்டு?
இதற்கான விடையை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தங்கை கேட்டாள்”என்னண்ணா ஒரே யோசனை?’
“மஞ்சள் துண்டு எங்கே போச்சுன்னே தெரியலை”.
“போண்ணா,உனக்கு வேற வேலையில்லை”
தங்கை போய் விட்டாள்.
”அம்மா!”-அழைத்தேன்.
என்னடா என்றபடி அம்மா வந்தாள்.
“எங்கேம்மா மஞ்சள் துண்டு?
”உன் கிட்ட ஏதுடா மஞ்சள் துண்டு?”
“அதாம்மா,இங்கே வச்சிருந்தேனே ஒரு துண்டு மஞ்சள்.-கருக்கி முகர்ந்து பார்ப்பதற்காக,அதுதான்”

“அதுவா,நேற்று வெள்ளிக் கிழமை இல்லையா.அடுத்த வீட்டு ராஜி வந்திருந்தாள்.வெற்றிலை பாக்கோடு கொடுக்க உள்ள வேறே குண்டு மஞ்சளே இல்லை.அதுதான் இங்கே இருந்ததை எடுத்துண்டேன்.வெளியில் போகும்போது மறக்காம 50 கிராம் குண்டு மஞ்சள் வாங்கிண்டு வந்துடு.”

இதுதான் மஞ்சள் துண்டு –துண்டு மஞ்சள்-காணாமல் போன சம்பவம்.

6 கருத்துகள்:

  1. ஆகா நம்பி வந்து ஏமாந்துட்டனே:-)))

    நல்லா இருக்கு சுட்சிவேஷன் தலைப்பு!!!

    பதிலளிநீக்கு
  2. நண்பரே! பதிவின் தலைப்பைப்பார்த்து ஏமாந்துவிட்டேன். பின்பு ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. @அபி அப்பா
    //ஆகா நம்பி வந்து ஏமாந்துட்டனே:-))) //
    அதுதானே நம்ம நோக்கமே!
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
    @வே.நடனசபாபதி
    //பதிவின் தலைப்பைப்பார்த்து ஏமாந்துவிட்டேன்.//
    பதிவின் உள்ளடக்கம் மொக்கையாக இருந்தாலும்,தலைப்பு எல்லாரையும் இழுக்கற மாதிரி இருக்கணும் என்பது பதிவுலகின் எழுதப்படாத விதி!!
    ரசித்து அதை சொன்னதற்கு நன்றி!
    @Saravana kumar
    //சத்தியமா முடியல //
    தெரியாத்தனமா நம்ம பதிவைப் படிக்க வந்துட்டீங்க இல்லே,எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டியதுதான்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கவர்ச்சியான தலைப்பு . அந்த காலத்தில் குமுதம் இதழில் வந்த ஒரு பக்க கதைகள் நினைவிற்கு வந்தன ! படிக்கும்
    போது எதை எல்லாமோ எண்ண வைத்து இறுதியில் முடிவு வேறு விதமாக அமைந்து சிறு புன்முறுவிலை தூண்டுமே
    அது போல . குமுதம் இதழுக்கே அனுப்பலாமே ! மேலும் இது போல படைப்புகளை எதிர்நோக்கும் .. வாசுதேவன்.

    பதிலளிநீக்கு
  5. @Vasu
    தமிழிலேயே எழுதிக் கலக்கிட்டீங்க!உங்கள் எதிர்பார்ப்புக்கு இணையான படைப்புகளைத்தர இறைவன் எனக்கு அருள் புரிய வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு