தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 08, 2010

தமிழ்ப்பதிவுலகில் சாதி வாரிக் கணக்கெடுப்பு!!

இப்போதெல்லாம் பல நேரங்களில் பல பதிவுகளில் சாதி பற்றிய பிரச்சினை எழுகிறது.ஒரு பதிவரை அவரது சாதி பற்றிக்கூறித் தாக்கப்படுகிறது.ஒருவரது சாதி உடனடியாகத்தெரியாதபோது,துப்பறியும் வேலையில் இறங்கி அவரது சாதி என்ன என்று கண்டுபிடிக்க நேருகிறது.இதற்காக தேவையற்ற கால விரையம் ஆகிறது.இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் ஒரு சாதிவாரிக் கணெக்கெடுப்பு நடத்துவதுதான்.யார் பார்ப்பான்,யார் பிள்ளை,யார் முதலியார்,யார் வன்னியர்,யார் இஸ்லாமியர்,யார் கிறித்தவர்,யார் தலித் என்பதெல்லாம் கணக்கெடுப்பில் தெரிந்து விடும்.ஒருவரை அவரது சாதியைச் சொல்லித்தாக்க வேண்டுமென்றால்,இக்கணக்கெடுப்புப் பட்டியலைப் பார்த்தால் போதும்.அதன் பின் மிக எளிதாகத்தாக்கத் துவங்கலாம்.

எப்படி இந்த உத்தி?

”சாதிகள் இல்லையடி பாப்பா ”-அய்யா பாரதி,அதெல்லாம் பாப்பாக்களுக்குத்தான்.எங்களை மாதிரிப் பெரியவர்களுக்கு இல்லை!

2 கருத்துகள்:

  1. நன்றாக சொன்னீர்கள். இவர்களைப்பார்த்து " நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" என மகாகவி பாடியதுபோல் பாடத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நடனசபாபதி அவர்களே,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு