தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 02, 2008

காமம் இல்லாக் கதை-5

"ஒரு மாலை இளவெயில் நேரம்-----"
"சொல்லு உமா,என்ன விஷயம்?"
"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க?"
"எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு.இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட?"
"இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்."
"ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமே!மற்றொரு நாள்?"
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்."
இரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் உமா.தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி ரவி கதவைத் திறக்கும்போது விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.ரவி உள்ளே வந்து உடை மற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.
"உமா,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.

மறு நாள்.
"யே தில் யே பாகல் தில் மேரா--------"
"ஹலோ ரவி,சொல்லு."
"ஹை,உம்ஸ்,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா"



"வருந்திகிறேன், ரவி.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது.எப்படியாயினும்,வாழ்த்துகள், ரவி"



"எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்"

"யே தில் யே பாகல் தில் மேரா--------"
"ஹல்ல்லோ,என்ன உம்மா?'
"எங்க இருக்கீங்க ரவி?"
"பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்"
"உடன் யார்?வழக்கமான நண்பர்களா?எதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."
"இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்."
"யார்?"
"உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்."
"ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீங்கள் சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்."

இப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.
இவர்கள் காதலித்து மணந்தவர்கள்-ஒரே அலுவலகத்தில் இருந்தபோது.அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.
இப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது.
ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது-அதிகமான மண முறிவுகள்(மன முறிவுகளால் வந்தவை) மென் பொருள் துறையில் இருக்கும் தம்பதியரிடையேதான் எற்படுகின்றன என்று.

பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?

4 கருத்துகள்:

  1. நல்ல மெசேஜ்
    எல்லாரும் திருந்தினா சரி!

    பதிலளிநீக்கு
  2. @ஜுர்கேன் க்ருகேர்,
    நல்லதே நடக்கட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அவளுக்கும் அவனுக்கும் என்று மனம் ஒன்று படும்
    நேரம் எப்பவோ.
    இதுதான் முன்னேற்றமா நம் ஊரில்:(

    பதிலளிநீக்கு
  4. @வல்லிசிம்ஹன்

    வசதிகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும்போது எதையெல்லாம் இழக்கிறோம் என்பதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல்.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு