தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 21, 2008

நதி நீர்ப் பங்கீடு

ஒரு முறை இரு அரசர்கள் போருக்குத் தயாராக ரோஹிணி நதிக் கரையில் படைகளை அணிவகுத்து நிறுத்தினர்.இதை அறிந்த புத்தர் அங்கு விரைந்து சென்று படைகளுக்கு நடுவில் நின்றார்.அச்சண்டைக்குக் காரணத்தைக் கேட்டறிந்தார்.இரு மன்னர்களும் அந்நதி நீர் முழுவதும் தமக்கே என்றனர்.புத்தர் அம்மன்னர்களைப் பார்த்துப் பேசலானார்.அந்நதியிலிருந்து சிறிது நீர் எடுத்து "இந்நீரின் மதிப்பு என்ன?" என வினவினார்.மன்னர்கள் பதிலளித்தனர்-இயற்கையில் இலவசமாகக் கிடைக்கும் நீருக்குப் பெரிய மதிப்பேதும் இல்லை என்று.

புத்தர் கேட்டார்,"மன்னர்களே,உங்கள் மதிப்பு என்ன?"

"அதிகம்"அவர்கள் பதில்.

"அரசிகளின் மதிப்பென்ன?"புத்தர் வினவினார்.இருவரும் பதிலளித்தனர்"நான் என் ராணியை மிக நேசிக்கிறேன்.அவ்ள் மிக மதிப்பு வாய்ந்தவள்."

"உங்கள் படைகளின் மதிப்பென்ன?"

"என் படை வீரர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.மிக மதிப்பு வாய்ந்தவர்கள்"

புத்தர் கேட்டார்"மன்னர்களே!மதிப்பு வாய்ந்த உங்கள் உயிரை,நீங்கள நேசிக்கும் உங்கள் அரசியின் உயிரை,முக்கியமான வீரர்களின் உயிர்களைக் கடலில் சென்று வீணாகும் இந் நதி நீருக்காகத் துறக்கப் போகிறீர்களா?இந்த ஆற்றில் உங்கள் ரத்த ஆற்றைக் கலக்கப்போகிறீர்களா?சிந்தியுங்கள்"

மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை நழுவ விட்டனர்.இருவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர்.நதி நீரைப் பங்கிட்டுக் கொண்டனர்.

அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.

ஆனால் இன்று?எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.

கால இயந்திரத்தில் ஏறி அந்தக்காலத்துக்குப் போக முடியுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக