தொடரும் தோழர்கள்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

தேங்காய்னா சும்மாவா?!


இப்போதெல்லாம் எத்தனையோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன.....அன்னையர் தினம்,தந்தையர் தினம்,பெண்கள் தினம்,குழந்தைகள் தினம் என்றெல்லாம்.இவற்றுக்கிடையே நேற்று ஆரவாரமில்லாமல் ஒரு தினம் கடந்து சென்றிருக்கிறது.நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பொருளின் தினம்

ஆம்.

அகில உலக தேங்காய் தினம்.

தேங்காயின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சில சமையல் வகைகளுக்குத் தேங்காய் இருந்தால்தான் சுவை.

என்றுமே மற்ற முடித் தைலங்களை விடத் தேங்காய் எண்ணெய்தான் தலைக்குத் தடவச் சிறந்தது.

கேரளாவில் சமையலுக்கு முழுவதும் பயன்படும் எண்ணெய்,தேங்காய் எண்ணெய்தான்.

இந்தத் தேங்காயைத்தரும் தென்னை மரம் ,கவிஞர்களின் வாக்கிலும் இடம் பெறுகிறது.

மூதுரையில் அவ்வையார் சொன்னார்

’நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.’’

எனவேதான் ஒரு திரைக்கவிஞன் சொன்னான்

தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு

என்று.

நன்றிக்கு எடுத்துக்காட்டாகப் புகழப் படுவது தென்னைதான்.

காணி நிலம் கேட்ட பாரதி கூட,வேறெந்த மரத்தையும் கேட்காமல்,”பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேண்டும்” என்றுதான் கேட்கிறான்.

நேற்று விநாயகர் சதுர்த்தி.

வேண்டுதல் நிறைவேற,விநாயகருக்குச் சிதறுகாய்(தேங்காய்) உடைப்பது வழக்கம்.

சதுர்த்திப் பிரசாதங்களில் மிக முக்கியமானது,தேங்காய்ப் பூரணத்தில் செய்த கொழுக்கட்டைதான்


தேங்காய் தினம் நேற்று அமைந்தது மிகப் பொருத்தம்தான்.

7 கருத்துகள்:

  1. எந்த ஒரு தகவலையும் ஒரு சுவையான பதிவாக மாற்றும் கலை உங்களுக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் தேங்காய் நாள் அன்று தேங்காயின் மகத்துவம் பற்றி விளக்கியமைக்கு பாராட்டுகள்! ‘தேங்காய் மூடி கச்சேரி’ பற்றி சொல்வீர்கள் என நினைத்தேன். அது பற்றி சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் பதிவுகள் இது போல் தொடர வேண்டும்...

    பல பதிவுகள் பாடம்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஐயா எல்லாவற்றுக்கும் ஓர்தினம் நேற்று முன்பு உலக கடித தினம்.

    விரைவில் கொழுந்தியாள் தினம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

    பதிலளிநீக்கு
  4. தேங்காய்க்கும் ஒரு நாளா.... சுவையாக தகவல் சொல்லும் உங்கள் பதிவுகளை நாங்கள் சில மாதங்களாக/வருடங்களாக இழந்து இருந்தோம். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. சுவையான பகிர்வு ஐயா...
    உடல் நலம் எப்படியிருக்கு?
    தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. தேங்காய் தினம் முதல் முறையாக அறிகிறோம்...

    எங்கள் வீடுகளில் தேங்காய் பயன்பாடு உண்டு கேரளத்துப் பழக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ஊரில் தென்னந்தோப்பே இல்லாமல் வீடுகள் இருக்காது அது போல தேங்காய் இல்லாமல் சமையலும். வீடுகளில் தென்னந்தோப்பு இல்லை என்றாலும் தோப்பாகப் பலரும் வாங்கி வைத்திருப்பார்கள். தேங்காய் எண்ணை எல்லாம் வீட்டில் தேங்காய் காய வைத்து ஆட்டில் எடுப்பதுதான் வாங்குவதே இல்லை வெளியில்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு