தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 13, 2018

உண்டி கொடுப்போர்

மனைவி கொடுத்த கூழைக் குடித்து விட்டு வேலைக்குப் புறப்படத் தயாரானான் முருகேசன்.

மனைவி வேகமாக அருகில் வந்து”என்னங்க!இன்னைக்குத் தக்காளி சாதம் செஞ்சிருக்கேன்,உங்க மதிய உணவுக்காக.ஒரு பிளாஸ்டிக் டப்பாவில தக்காளி சாதமும்,இன்னொரு டப்பால தயிர் சாதமும் வச்சி,பையில போட்டு  ரப்பர் பேண்டால கட்டி வச்சிருக்கேன். ஸ்பூனும் வச்சிருக்கேன்.இந்தாங்க.எடுத்துட்டுப் போங்க..........’என்று சொல்லி விட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.

அவன் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

“என்னங்க!மதியம் 2 மணிக்குள்ள சாப்பிட்டுடுங்க.அப்பதான் தக்காளி சாதம் நல்லாருக்கும்” என்று வாசல் வரை வந்து சொல்லி வழி அனுப்பினாள்.

முருகேசன் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் கைபேசியில் தகவல்கள் வரத்தொடங்கின.

நேராக ஆரிய பவன்.இட்லி சாம்பார்,வடை.பார்சல் பையை தனது கம்பெனி பைக்குள் வைத்தான்.அதற்குள் முன்னமே ஓர் ஓரமாகத் தனது சாப்பாட்டுப் பையை வைத்திருந்தான்.

அருகில் இருக்கும் மற்றொரு உணவகத்திலிருந்து மற்றொரு பார்சல்.

அதுவும் பைக்குள் புகுந்தது.

அந்த இரண்டையும் கொடுக்க வேண்டிய இடங்களை நோக்கிப் புறப்பட்டான்.

தொடங்கி விட்டது அன்றைய வேலை


ஒட்டல் ஒட்டலாய் ,வீடு வீடாய் ,தொடர்ந்து பயணம்.

இன்று வழக்கத்தை விட ஆர்டர்கள் அதிகம்.

தொடர்ந்து ஓடிக் கொண்டே -ஓட்டிக் கொண்டே இருக்க நேர்ந்தது.

நிற்பதற்கு நேரமில்லாத ஓட்டம்.

குறித்த நேரத்துக்குள் டெலிவரி செயவ்து அவசியம்.

பசித்தது.

மணியைப் பார்த்தான்.

2.10

மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது.

அடுத்த ஆர்டருக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

வண்டியைச் சாலையோரத்தில் நிறுத்தினான்.

பையைத்திறந்து மனைவி கொடுத்த உணவை எடுத்தான்.

ஸ்பூனால் சாப்பிடத் தொடங்கினான்.

தக்காளி சாதம் நன்றாகவே இருந்தது என எண்ணினான்.

ஆனால் முழுவதும் சாப்பிடாமல் தயிர்சாத டப்பாவை எடுத்துக் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிட்டான்.

நேரம் ஆகி விட்டது..

கைபேசி ஒலித்தது

அடுத்த டெலிவரிக்குப் போக வேண்டும் .

டப்பாக்களைக் கட்டிப் பைக்குள் ஓரமாக வைத்தான்.

புறப்பட்டான்

பாவம் அவனுக்குத் தெரியாது.......

அவனது சாப்பாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சமூக ஆர்வலர் காணொளியாக எடுத்து  விட்டார் என்பது!


டிஸ்கி:இது முழுவதும் கற்பனையே.















16 கருத்துகள்:

  1. இப்படி ஒரு காரணத்தை சிந்திக்க விடாம செஞ்சிடுச்சி இந்த இணையம் வீடியோ எடுத்த அவருக்கு தெரியுமா அவரோட வீட்டு சாப்பாடுதான் அவரு சாப்பிடறாருனு பாவம் அந்த மனுசன் வேலை போயிருகும் இல்லைய

    பதிலளிநீக்கு
  2. சம்பந்தப்பட்டவரை மதுரையில் பிடித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். நிஜமோ, பொய்யோ... ஆனால் கற்பனை நன்றாக இருக்கிறது!

    இப்போது இதுபோன்ற ஊழியர்களுக்கு ட்ரெஸ் கோட் என்று வாயை, மூக்கை எல்லாம் மூடி ஒரு படம்போட்டு ஒரு வாட்ஸாப் பகிர்வு உலா வரத்தொடங்கி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய் மூக்கு மூடறது கிச்சன்ல வேலை பார்க்கிறவங்களுக்குத்தான். மற்றபடி சென்னைல டூவீலர் ஓட்டுறவங்க எல்லாருமே டெரரிஸ்ட் மாதிரியான முகமூடியோடதான் வண்டி ஓட்டறாங்க.

      நீக்கு
  3. வணக்கம் ஐயா நலமா ?
    அவ்வப்போது இப்படி கற்பனையை எடுத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. சமூக வலைதளங்களினால் இதுபோன்ற நிகழ்வுகளும் பெரிதாக்கப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  5. ஶ்ரீராம், நீங்க கேட்டீங்களே, இங்கேயே ஆதரவுக் கருத்துகள் இருக்கின்றனவே! இதுக்கு என்ன சொல்லறீங்க? :)))) இப்படித் தான் பலரும் சொல்கின்றனர். ஆனால் அவர் எடுத்துச் சாப்பிடும் உணவுப் பெட்டிகள் பாக்கிங்கில் இருந்து எடுத்துச் சாப்பிடுபவை! தனியாக எல்லாம் வைக்கலை. ஒவ்வொன்றாய் எடுத்துச் சாப்பிட்ட பின்னர் மிச்சத்தை மறுபடியும் செலோடேப் ஒட்டிப்பாக் செய்து அந்தக் கடைப்பைக்குள் வைக்கிறார்! :)))) பசிச்சால் முழுசும் சாப்பிட வேண்டாமா? எது ஒன்றையும் முழுசும் சாப்பிடவில்லை! டேஸ்டுக்காகச் சாப்பிடுகிறார் என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கு இப்போது இனி வாங்குவதில் தயக்கம் இருக்கும்!

      நீக்கு
  6. அவர் தன் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடுகிறார் என்று நினைப்பவர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்! அடிக்கடி ஸ்விக்கி/ஜொமேட்டொ மூலம் வாங்கிக் கொண்டிருந்த நான் இப்போது இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இந்தப் பதிவு ஒரு கற்பனையே தவிர நியாயபடுத்தல் அல்ல.
      நன்றி

      நீக்கு
    2. உண்மைதான் ஸார். நாங்களும் அவ்வப்போது வாய்க்கொழுப்புக்கு இவற்றை உபயோகிப்பபவர்கள்தான். இப்போது தயக்கமாக இருக்கிறது.

      உங்கள் கதை வெறும் கற்பனை என்பது எனக்குத் தெரியும் ஸார். காலையிலேயே அதற்குத்தான் பின்னூட்டமிட்டேன்.

      நீக்கு
    3. நிறைய ரெஸ்டிராரண்டுகள் நல்லா பேக் செய்து அனுப்பறாங்க (பிளாஸ்டிக் சீலோட. உதாரணம் கேசி தாஸ்). அதுனால அதில் ஃப்ராடு செய்யமுடியாது. தோசை பூரி சாம்பார் போன்றவை அனுப்பறவங்கதான் இதுல கோட்டைவிடறாங்க. அதுவும் கொஞ்ச காலத்துல சரியாகிடும்.

      நீக்கு
  7. சார்... உங்கள் கற்பனை நன்றாக இருக்கு. ஆனால், அவங்க (அதாவது டெலிவரி பண்ணறவங்க-உலகம் முழுக்க) ரூல்ஸ் பிரகாரம், சொந்த உணவு டெலிவரி பையில்/பாக்ஸில் வைக்கமுடியாது. நேரம் மெயிண்டைன் பண்ணணும். கண்ட இடத்துல நிறுத்த முடியாது.

    நீங்க ஆர்டர் பண்ணும்போது பார்த்திருப்பீங்க. டெலிவரி பண்ணும்போது பின் நம்பர் கொடுக்கணும். அதுதான் டெலிவர் செய்ததற்கு ஆதாரம். சிலபேர் வழிலேயே போன்பண்ணி உங்க நம்பர் என்னன்னு கேட்பாங்க. அதைக் கொடுக்கக்கூடாது. டெலிவர் பண்ணினால்தான் கொடுக்கணும். இல்லைனா டெலிவர் பண்ணலைனு கம்பிளெயிண்ட் பண்ணமுடியாது.

    பதிலளிநீக்கு
  8. என் பையன் ஸ்விக்கிலதான் தினமும் வாங்கி சாப்பிடுறான். இது இப்பிடியெல்லாம் நடக்குதா.. :( வெளிநாடுகளில் பிஸா டெலிவரி பத்தி இப்பிடி ஒரு வீடியோ வந்ததா சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  9. நடந்த ஒரு நிகழ்வை வைச்சு அழகா கதை சொல்லிட்டீங்க...

    கற்பனை அருமை...ஆனால் கண்டிப்பாக இதில் வாங்கியவர்களுக்குத் தயக்கம் வரவே செய்யும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அவர் உப்பு, புளி, காரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திருப்பார். விடுங்க bro....

    பதிலளிநீக்கு