செல்வி!
என்னம்மா?
பக்கத்து
வீட்டுல அந்தம்மா,அய்யா எல்லாம் வெளியூர் போயிருக்காங்க.அந்தத் தம்பி சீனு தனியா இருக்கு;அவனுக்குக்
காலையில டிபன்,காபி நான் குடுக்கறேன்னு அந்தம்மா கிட்ட சொல்லியிருக்கேன்.போய் அவன்கிட்ட
சொல்லிட்டு வா.
கதவு
திறந்துதான் இருந்தது.மணி அடிக்கலாமா என யோசித்தாள்.அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்து
உள்ளே சென்றாள்.கூடத்தில் யாருமில்லை.
”சீனு”
கூப்பிட்டாள்
உள்ளிருந்து
வெளியே வந்தான் சீனு
அப்போதுதான்
உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு
வந்தான்.
அவனுக்கு
முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது
ஹப்பா!அவளுக்கு
மிகவும் பிடித்த மணம்.
அவள்
அப்பாவிடமும் இதே மணம்தான் வீசும்.
அவளுக்கு
மிகவும் பிடிக்கும்
ஆனால்
அவள் அம்மாவுக்குப் பிடிக்காது
எந்த
சோப்புப் போட்டுக் குளிச்சாலும் இந்தக் கத்தாழை நாத்தம் உங்களை விட்டுப் போகாது என்று
சலித்துக் கொள்வாள்
இப்போது
சீனுவிடம் அதே மணம்
இத்தனை
நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்
அவளுக்கு
அவள் அப்பாவின் சாயல்.அப்பாவின் மேனரிசம்,அப்பாவின்நடை உடை உள்ள எல்லாரையும் பிடிக்கும்
இப்போது
சீனு.
அவள்
தோழி சுமதி கூட ஒரு சொல்லியிருக்கிறாள்,அவளுக்கு
எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இருப்பதாக!
இருந்து
விட்டுப் போகட்டும்
அது
அவளுக்குப் பிடித்திருக்கிறது
டிஸ்கி:இந்நாவலை எழுதி முடிக்க ஆண்டொன்று கூட ஆகலாம் எனத் தோன்றுகிறது.
ஹேவலாக் எல்லிஸின் ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும். அநேகமாக “பப்பாளி மர உச்சியிலாடும் பச்சைத் தேவாங்கு “ வெளி வரும்போதுதான் இதுவும் வெளிி வருமோ!