தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 28, 2013

மீண்டும் பதிவு எழுதலாமா?!



சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம்!

கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்.

தொடர்ந்து பழகுதல் என்பது அவசியம்

ஒரு சிறந்த பாடகனாயினும் தினம் சாதகம் செய்தால்தான் குரல் ஒத்துழைக்கும்.

அது போலத்தான் எழுதுவதும்.

எழுதிக்கொண்டே இருந்தால் புதிய கருத்துகள்,சிந்தனைகள் பிறந்து கொண்டே இருக்கும்.

சில காலம் எழுதாமல் இருந்து விட்டால்,சிந்தனை துருவேறி விடும்;கற்பனை  சண்டித் தனம் செய்யும்.

அதுதான் இன்று என் நிலையும்.

சில காரணங்களால் பதிவு எழுதுவதையே நிறுத்தியிருந்தேன்.

மீண்டும் எழுதலாம் என்ற எண்ணம் எழும்போதும் ,ஒரு தயக்கம் வந்து தடுத்துக் கொண்டிருந்தது.

ஆனால் இரு வாரங்களாக வலைச்சரத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்களும், திரு நாஞ்சில் மனோ அவர்களும் என்னை அன்புடன் நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்தி,மீண்டும் எழுதும் எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டார்கள்.

ஆனால் கணினி முன் அமர்ந்தால்   படிக்காமல் போய்த் தேர்வில் கேள்வித்தாளைக் கையில் வாங்கிப் பார்த்து விழிக்கும் மாணவன் போல் உணர்கிறேன்.

என்ன செய்யலாம்?

மனக்குதிரை ஓடத் தொடங்கும் வரை,இதுநாள் வரை நான் எழுதியவற்றில்  எனக்குப் பிடித்த சில பதிவுகளை மீள் பதிவாகத் தர எண்ணுகிறேன்.

 முன்பே படித்தவர்கள் பொறுத்தருள்க!

இது வரை படிக்காதவர் படித்துப் பயன்(!) பெறுக!


நாளை முதல், மீள்பதிவு!
நாளை,முதல் மீள் பதிவு!

37 கருத்துகள்:

  1. கட்டாயம் மறுபடியும் பதிவு எழுத வேண்டும். படிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள்... எழுதுங்கள்... மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் வரவு நல்வரவாகட்டும்! ஆவலுடன் பதிவுகளை படிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா ... தாங்கள் மீண்டும் வருவது கண்டிப்பாக மகிழ்ச்சியான செய்தி .. உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம் .. வருக ,,, வருக

    பதிலளிநீக்கு
  5. // ஆனால் இரு வாரங்களாக வலைச்சரத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்களும், திரு நாஞ்சில் மனோ அவர்களும் என்னை அன்புடன் நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்தி,மீண்டும் எழுதும் எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டார்கள். //

    ஒரு மூத்த மரியாதைக்குரிய பதிவரை கௌரவப் படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான். உங்கள் உடல்நலத்திற்கு முதலிடம் கொடுக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தைத்தடை செய்தது உடல் நலமின்மை அல்ல தமிழ் இளங்கோ.சில கவலைகள்,வேறு சிலகாரணங்கள். இந்த அன்பு வட்டத்தை விட்டுப் போக முடியுமா!
      அன்புக்கு நன்றி

      நீக்கு
  6. சில சமயங்கள்ல தொடர்ந்து எழுதிட்டிருக்கற போதே கூட ப்ரெய்ன் ஹேங் ஆகி எதுவும் ஓடாம போற ஒரு அவஸ்தை எனக்கு வர்றதுண்டு. நீங்க கொஞ்சம் கேப்புக்கப்பறம்தானே இப்டி ஃபீல் பண்றீங்க. ஆனா, எனக்குத் தெரியும்- தல அடையாறு அஜீத் ஒரு எக்ஸ்ப்ரஸ்னு! இஞ்சின் ஸ்டார்ட்டாயிட்டா அப்புறம் பறக்கத் துவங்கிடும்ல! அதுவரைக்கும் வெயிட் பண்றேன் நானும்! வெல்கம்! வெல்கம்! வெல்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நல்வாழ்த்துகளும் நம்பிக்கையும் எனக்கு சக்திதரட்டும்!
      நன்றி பாலகணேஷ்

      நீக்கு
  7. பால கணேஷ் சார் சொன்னது போல அடையாறு அஜீத் அடுத்த வரலாறு படைக்க ஆயத்தமாகட்டும்

    பதிலளிநீக்கு
  8. வருக!வருக!! மீண்டும் பல்சுவைக் கருத்துக்கள் தருக.
    பதிவில் எழுத உங்களுக்கா தயக்கம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகள் துணை நிற்கட்டும்!
      நன்றி சார்

      நீக்கு
  9. கமண்ட்ல பாத்தீங்களா சார் பாசக்கார ஆளுங்களை. விரைவில் வருக காட் ஃபாதர்!

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவையே மீள் பதிவாக போட்டால் என்ன?

    பதிலளிநீக்கு
  11. Dear Sir

    When things are beyond your control, leave it to Him. Immerse in something, which is good to you and everyone around you, even like walking is good enough. My sincere wishes to you, to get back to form.

    Anbudan
    Packirisamy N

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதுமே அவனையே நம்புகிறவந்தான்!
      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.,

      நீக்கு
  12. ப்ளீஸ்..அந்த தப்பை மறுபடி பண்ணிறாதீங்க..-:)

    கலக்குங்க பித்தரே...

    பதிலளிநீக்கு