ஒரு மலை.
அதன் மீது மூன்று இளம் மரங்கள்.
வளரத் தொடங்கும் காலம்.
வளர்ந்து பெரிய மரங்களான பின் என்னவாக மாறுவோம்
எனக் கனவு கண்டன
மூன்றும்.
முதல் மரம் எண்ணியது”நான் மிக அழகிய பெட்டியாவேன் ;என்னுள் தங்கமும் வைரமும்
பணமும் நிறைந்திருக்கும்”
இரண்டாவது மரம் எண்ணியது”நான் வலுவான கப்பலாவேன்;சமுத்திரத்தில் மன்னர்களைச் சுமந்து
செல்வேன்”
மூன்றாவது மரம் எண்ணியது”நான் இங்கேயே இருப்பேன்;உலகின் மிகப் பெரிய மரமாய் வளர்வேன்”
காலம் ஓடியது
மரங்கள் வளர்ந்து விட்டன
ஒரு நாள் மூன்று மரம் வெட்டிகள் வந்தனர்
முதலாமவன் முதல் மரத்தைத்
தேர்ந்தெடுத்து வெட்டினான்
மரம் நினைத்தது “நான்
பணப்பெட்டியாகபோகிறேன்.”
இரண்டாவது மரம் வெட்டி இரண்டாவது
மரத்தைத் தேர்ந்தெடுத்தான்.
”ஆகா !நாம் கப்பலாகும் காலம்
வந்துவிட்ட்து”மரம் மகிழ்ந்தது
மூன்றாவது மரவெட்டி,மூன்றாவது மரத்தை
நெருங்கினான்”அய்யகோ!என்னை வெட்டப் போகிறான்”மரம் பயந்தது.
முதல் மரம் தச்சுப் பட்டறையை அடைந்த்து.
அங்கு அது ஒரு மாட்டுத்தீவனம் வைக்கும்
பெட்டியானது!
தன் நிலை எண்ணி அழுதது!
இரண்டாவது மரம் பட்டறைக்கு எடுத்துச்
செல்லப்பட்டது.
அங்கு அது ஒரு சிறிய படகாக மாறி சின்ன
ஏரியில் மிதக்கத் தொடங்கியது.
மூன்றாவது மரத்தை எடுத்துச் சென்றவன் அதைக்
கட்டைகளாகச் செதுக்கி வைத்து விட்டான்
மரம் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து
அழுதது!
நாட்கள் நகர்ந்தன.
ஓரிரவு ஒரு பெண் அப்பெட்டியில் ஒரு
சிசுவை வைத்தாள்,
இதுவே இவன் தொட்டில் என்றாள்.
மரம் உணர்ந்த்து-உலகின் மிகப் பெரிய பொக்கிஷம்
தன்னுள் இருப்பதை!
ஒரு பொன்மாலைப் பொழுது!
ஒரு மனிதரும் அவர் நண்பர்களும் படகில்
ஏறினர்.
படகு செல்லும்போது மின்னல் மின்னியது;இடி
இடித்தது ;புயல் வந்தது.
படகு தத்தளித்தது.
அந்த மனிதர் வானத்தைப் பார்த்து அமைதி
என்றார்!
புயல் அடங்கியது.
படகு உணர்ந்தது,தான் தேவகுமாரனைச்
சுமப்பதை!
ஒரு வெள்ளியன்று,சிலர் வந்து
மூன்றாவது மரக் கட்டைகளை எடுத்துச் சென்று ஒரு சிலுவையாக்கினர்.
அச்சிலுவையில் ஒரு மனிதரை அடித்தனர்.
மரம் அழுதது,தன் இழிநிலைக்காக.
ஆனால் ஞாயிறன்று,அம்மனிதர் உயிர்தெழ
உலகம் மகிழ்ந்தது.
மரத்துக்கும் மகிழ்ச்சி –இனி தான்
தேவனுடன் சேர்த்து எண்ணப்படுவோம் என்பதில்!
ஆம் நன்பர்களே! நீங்கள் எண்னியது
நடக்கவில்லை என்று வருந்தவேண்டாம்;அதை விடச் சிறந்த ஒன்றை இறைவன் உங்களுக்காகத்
திட்டமிட்டுள்ளான் என்பதை உணர்ந்து மகிழுங்கள்!
(படித்தேன்;பகிர்ந்தேன்!)