தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 22, 2012

சூரிய புத்திரி!



 டிசம்பர் மாதக் கணையாழி இதழில், என்னுடன் பணிபுரிந்து வந்த,இன்னும் பணியில் இருக்கும் நண்பர் ‘சித்ரூபன்” எழுதிய  சிறுகதையை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்,

1984 இலிருந்து-88 வரை நான் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் துணைக் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்த காலத்தில்,அங்கு இருந்தவர்.அவர் எழுதிய ’சிஏஐஐபி’ என்ற  நாடகத்தை வங்கி மன மகிழ் மன்ற ஆண்டு விழாவில் ரசிகரஞ்சனி சபா அரங்கில் மேடை யேற்றிய போது,நான் அதில் இரு வேடங்களில் நடித்தேன்-

அது பற்றிய என் பதிவைப் படிக்க இங்கு செல்லவும்

இன்று சித்ரூபனும்அந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தார்

சிறுகதைக்கு அவர் கொடுத் த தலைப்பு—சூரியன்

நான தலைப்பை சிறிது மாற்றி விட்டேன்”சூரிய புத்திரி” என்று!

கதையின் நீளம் கருதி அதை ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக வெளியிடுகிறேன்.

இதோ கதை----

வெள்ளைத் தொப்பியணிந்து சோபாவில் அமர்ந்திருந்தேன்.பக்கத்தில் என் தங்கையும் காத்தி ருந்தாள்.எங்களைத் தவிர குறைந்தது பத்து நபர்களாவது இருப்பார்கள்.சிலர் கண்களில் மருந்து விடப்பட்டு,கையில் பஞ்சோடு தலையைப் பின் பக்கம் சாய்த்தபடி உட்கார்ந்தி ருந்தார்கள். சுவரில் ஒரு குழந்தை உதடுகளைக் குவித்து’உஷ்ஷ்ஷ்...’என்றபடி இருந்தது.அந்த அன்புக் கட்டளை யையும்  மீறி எங்கோ வெடியோசை கேட்டது.தீபாவளியின் மிச்ச மீதத்தைத் தீர்த்துக் கட்டும் முயற்சியோ?அந்த சிவகாசிச் சனியன்தான் நேற்று என் தங்கையின் கண்களைப் பதம் பார்த்துவிட்டது.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டாக்டர் வேகமாகத் தன்னறைக்குள் சென்று மறைந்தார். அறைக்கதவு ’டாக்டர்.ஏ.சுப்ரமோனி எம்.எஸ்;டி.ஓ’ என்றபெயரைத் தாங்கியபடி உள்ளுக்கும் வெளிக்குமாய் அலைந்து நின்றது

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு எங்கள் முறை வந்தது.என் தங்கை என் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தாள்.டாக்டர் ஒரு சுழல் நாற்காலியில் அரை வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்.மேசையில் நிறைய லென்ஸ்களும் வெறும் ஃப்ரேம்களும் இருந்தன.சுவரில் நீள அட்டையில் பல எழுத்துக்கள்மேலிருந்து கிழாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருந்தன.

“வாம்மா.இப்படி ஒக்கார்”

அவளுடன் நானும் அமர்ந்தேன்.

“பேரு என்ன?”என்றபடியே பிருஸ்கிருப்ஷன் பேடை தயாராக்கிக் கொண்டார்.

”ரோகிணி” என்றாள் என் தங்கை,கண்களை மூடிய படியே.

டாக்டர் உச்சரித்துக் கண்டே எழுதினார்”ரோ..ஹி..ணி..”

“ரோஹிணி இல்லேடாக்டர்.ரோகிணி.ஆர்ஓஜிஐஎன்இ”

“அப்படியா”புன்னகைத்தபடி என்னைப் பார்த்தார்.

“இப்படித்தான் டாக்டர்,பிடிவாதம்”என்றேன்.

“பேர் விஷயத்தில் பிடிவாதமா இருக்கறது தப்பில்லே..என் பேரை சுப்பிரமணின்னு யாராவது எழுதினா எனக்கும் பிடிக்காது”என்று சொல்லி விட்டு”என்னாச்சு,சொல்லுங்க..”என்றபடி ஒரு டார்ச்சால் ரோகிணியின் கண்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்



“நேத்து பட்டாசு வெடிக்கும்போது கண்லே நெருப்புபொறி பட்டுடுத்து” என்றேன்

“தீபாவளி சமயத்துல இந்த மாதிரி கேஸ் வரது சகஜம்தான்…இது சம்திங் சீரியஸ்..”அறை விளக்கைஅணைத்துவிட்டு இருட்டில் மெல்லிய ஒளிக்கற்றைஅவள் கண்களில் செலுத்திப் பரிசோதித்தார்.

மீண்டும் விளக்கைப்போட்டு”..ப்யூபில் ரொம்ப அஃபெக்ட் ஆயிருக்கு..” என்று சொல்லி ப்ரேமுடன் கூடிய கிரீடம் மாதிரி ஒன்றை அணிந்துகொண்டு மீண்டும் அவள் கண்களை மிக அருகில் வெளிச்சம் பாய்ச்சி உற்று நோக்கி உதட்டைப் பிதுக்கினார்.

“குணப்படுத்தலாம்.ஒரு சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்..”என்றவாறே கிரீடத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தார்.

“நான் பழையபடி சூரியனைப் பார்க்க முடியுமா டாக்டர்?”என்று கேட்டாள் ரோகிணி.

“யு மீன் த சன்?”என்றார் வியப்புடன்.

“ஆமா டாக்டர்”

“சூரியனை எதுக்கம்மா நீ பாக்கணும்?..உன் கண்ணு ரொம்படேமேஜ் ஆயிருக்கு.. பிரகாசமா, கூச வைக்கிற எதையுமே நீ பாக்கக்கூடாது..”

“சூரியனைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது டாக்டர்” என்று சொல்லி என் கைகளை அழுத்தினாள்

டாக்டர் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்.

நான் விவரிக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

15 கருத்துகள்:

  1. சரளமான நடை
    சுவாரஸ்யமாகப் போகும் கதையை
    நீங்கள் நிறுத்திய இடம் அருமை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  2. ஆமா ஏன் சூரியனை அப்படி அவசியமா பார்க்கனுமாம் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  3. சூரியனைப் பாக்காம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது டாக்டர்” என்று சொல்லி என் கைகளை அழுத்தினாள்..

    சூரிய புத்திரி ..!!

    பதிலளிநீக்கு
  4. அருமை! சுவாரஸ்யம்+எதிர்பார்ப்பு நிறைந்த கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அருமையான எழுத்துநடை! சிறப்பான சிறுகதை!

    பதிலளிநீக்கு
  6. ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. ஐயா வலைச்சரம் வாங்களேன் .. உங்களை இன்று யாரோ சீண்டி இருக்காங்க ...

    பதிலளிநீக்கு
  9. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/1.html)

    பதிலளிநீக்கு