தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 20, 2012

தற்கொலை ஒரு தீர்வாகுமா?



இன்று மதியம்.

கணினி முன் அமர்ந்து,carnaticradio.com இல் கர்நாடக இசை  கேட்டுக்கொண்டிருந்தேன்.

தொலைபேசி மணி ஒலித்தது.

பேசியவர் என்னுடன் வங்கியில் பணி புரிந்தவர்.

அவர் கணவர் ஒரு பத்திரிகையில் பொறுப்பில் இருப்பவர்.

அவர் சொன்ன திடுக்கிடும் செய்தி---நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் அவர்கள் கோட்டூர்புரம் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்பது.

நான் அந்த நிமிடத்தில் செயலற்றுப் போனேன்.

கர்னாடக இசையில் மட்டுமன்றித் திரை இசையில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட நித்யஸ்ரீயின் வாழ்வில் இப்படி ஒரு இடியா?

பின்னரே தொலைக்காட்சியில் செய்தி கசிய ஆரம்பித்தது.

சிறிது நேரம் சென்ற பின் அடுத்த இடி.

நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுக் காப்பாற்றப் பட்டார்.

அவரது இரண்டு பெண் குழந்தைகளுக்கும்,மற்ற குடும்பத்தவர்க்கும் இதெல்லாம் எத்தகைய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்?

ஆறாத மனக்காயத்தை அளித்திருக்கும்?

என்ன சொல்வதென்று எனக்குத்தெரியவில்லை.

நித்யஸ்ரீக்கும்,அக்குழந்தைகளுக்கும்,இத்துயரத்திலிருந்தும் ,இந்த அதிர்ச்சியிலிருந்தும் மீளும் சக்தியை இறைவன்தான் அளிக்க வேண்டும்.

இனி நான் எழுதப்போவது,குறிப்பாக இந்தத்  தற்கொலையைப் பற்றி அல்ல.

பொதுவாக தற்கொலை என்ற செயலைப் பற்றி.

சிலர் சொல்கிறார்கள் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்ல ;அதற்கு மன உறுதி வேண்டும் என்று.

ஒப்புக்கொள்கிறேன்;ஆனால் தற்கொலை செய்து கொள்வதில் மட்டுமே இருக்கிறது அந்த மன உறுதி.

பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனத்தில் பிறந்த மன உறுதி.

நிதானமாக யோசித்துச் செயல்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதா?

தற்கொலை என்னும் முடிவு ஒரு கண நேரத்தில் எடுக்கப் படும்,விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத, உணர்ச்சி மயமான முடிவு.

அந்தக்கடைசி நொடிகளில்,உயிர் பிரியும் நேரத்தில் ஐயோ அவசரப்பட்டு விட்டோமே என்ற எண்ணம் நிச்சயமாகத் தோன்றும் என்றே எண்ணுகிறேன்.

ஆனால் காலம் கடந்து விடுகிறது.

எனவே கடவுளிடம் ஒரு வேண்டுகோள்—

தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;

அவர்கள் மீண்டும் அந்த தற்றைச் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

28 கருத்துகள்:

  1. தற்கொலையைச் செய்யத் தூண்டுவதும் கடவுள் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி!எனவேதான் அவனே இன்னொரு வாய்ப்பும் தரட்டுமே!
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  2. கடவுள் அழகான வாழ்வைத் தந்து வாழ்வதற்கான வழியையும் காட்டித்தந்துள்ளார்...
    அதைவிடுத்து வாழ்வில் ஏற்படும் சிறிய சிறிய பிரச்ச்னைகளுக்கெல்லாம் தற்கொலை செய்வதன்பது முட்டாள் தனம்.. இவர்கள் முட்டாள் தனமாக எதையாவது செய்வார்கள் அதற்கு கடவுள் மன்னித்து சந்தர்ப்பம் வேற கொடுக்கனுமா என்ன..?

    விதி என்ற ஒன்று இருக்கிறது ஐயா..
    இன்ன காரணத்தால் இன்ன இடத்தில் இவரின் மரணம் நிகழும் என்று கடவுள் எம்மைப் படைக்க பல ஆண்டுகளுக்கு முன்னமே தீர்மானித்துவிட்டார் அதன் படிதான் எல்லாம் நடக்கும்..
    விதியை வெல்லக் கூடிய ஒன்று தர்மமும் பிரார்த்தனையும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் விதி என்று தெரிந்தாலும் மனம் பதறுவதைத் தடுக்க முடியுமா ஆத்மா?
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நானும் அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியுற்றேன். தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு நொடியில் முடிவை தேடிக்கொள்கிறார்களாம். சிறிது நேரம் அது பற்றி யோசித்தால் அவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. அந்த ஒரு கணம் யோசிக்கும் வாய்ப்பை இறைவன் கொடுக்கவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளும் ஆகும். திருமதி நித்யஸ்ரீக்கும், அவரது குழந்தைகளுக்கும், குடும்பத்தார்க்கும் இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனை வேண்டுவதே நம்மால் முடியும்.
      நன்றி சபாபதி சார்.

      நீக்கு


  4. நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தங்கள் கூற்று ஏற்புடையதே

    பதிலளிநீக்கு
  5. தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;

    அந்த கணம் கடந்தால் நிச்சயம் வாழ முயற்சிப்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே அம்மா!
      நன்றி

      நீக்கு
  6. தற்கொலைகளிலும் வகைகள் உண்டு.

    வயது முதிந்தோரின் தற்கொலைகள். இளம் வயதினரின் தற்கொலைகள். நடுவயதினரின் தற்கொலைகள் போக, மத நம்பிக்கைவழிவந்த தற்கொலைகள், அறிவாளிகளின் தற்கொலை.

    மதநம்பிக்கை ...ஜெயின் முனிகள் உணவுட்கொள்ளாமல் தங்களை மரித்துக்கொள்ளல். அவர்கள் மதவழிப்படி நடப்பது.

    அல்பர்ட் கேமஸ் ஒரு தத்துவஞானி. அவரின் தற்கொலை தானே நிதானித்து எடுத்த முடிவு. தமிழ்க்கவிஞர் ஆத்மநாபனின் தற்கொலை. தானே நிதானித்து எடுத்த முடிவு.

    இவர்கள் தற்கொலை குற்றவுணர்ச்சியாலல்ல. அதுவும் ஒரு தத்துவம் என்பதனால் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காதென்று தெரியும். போகட்டும்.

    சாதாரண மனிதர்களின் தற்கொலைகள் முழுவதையும் ஒரு சேரப்பார்த்து நீங்கள் எழுதியதுதான் உங்கள் கருத்துக்கள். தவறு. ஒவ்வொரு தற்கொலையையைத் தனியாகத்தான் பார்க்கவேண்டும்.

    கோழைத்தனம், மனவுறுதி, அப்படியிருந்தால் இப்படியிருந்துக்கும் என்பனவெல்லாம் செல்லா. மன்னிக்கவும். அவர்கள் மனங்களில் ஊடுறுவி உங்களால் வாழ்ந்தாலொழிய அவர்களைப்புரிய உங்களால் இயலாது.

    கடவுளை இங்கிழுத்தல் இழுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரிகையைப் பார்த்தால் பரிட்சை தோல்வி,காதல் தோல்வி,குடும்பத்தகராறு இவை காரணமாகவே அநேக தற்கொலைகள் நிகழ்கின்றன.இவையெல்லாம் வாழ்வை முடித்துக் கொள்ள வலுவான காரணங்களா?நீங்கள் குறிப்பிடுபவை விலக்குகள்;விதி அல்ல.நான் சொல்ல வந்தது பெரும்பாலான தற்கொலைகள் பற்றி.ஒரு கடைசி வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் வாழலாமே என்ற ஆதங்கம்தான் நான் எழுதியது.அவ்வளவே.
      தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி குலசேகரன் அவர்களே

      நீக்கு
  7. Uyir pogum andha tharunatthil epadi valitthu irukum. Kandipaga eppadiyavadhu uyir pizhaika vendum enru tharkolai seidhu kolbavargal andha ganatthil perum muyarchi seivargal. Aanalum apodhu onnum seiya mudiyadhu. marana avasthai migavum kodiyadhu. Ninahthale bayamaga irukinradhu.

    பதிலளிநீக்கு
  8. நித்யஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;// உண்மை..

    பதிலளிநீக்கு

  10. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிரித்த முகத்தோடு பாடும் அந்த இளம்வயது பாடகி நித்யஸ்ரீயின் முகம் கண் முன் நிழலாடுகிறது. அவருக்கு நேர்ந்த கொடுமையை என்னவென்று சொல்வது. அவர் தனது குழந்தைகளுக்காக வாழ வேண்டும். உங்கள் பதிவின் மூலம் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சோகமான நிகழ்வு.ஒவ்வொரு ஆண்டும் இசை விழாக் கச்சேரிகளை கண்டு கேட்டு ரசித்து வரும் எனக்கு இது பெரிய அதிர்ச்சி.
      நன்றி ஐயா.

      நீக்கு
  11. நித்யஸ்ரீ யும் தற்கொலைக்கு முயன்றார் என்பது தவறான தகவல் என்றும், அவர்களது குழந்தைகளுக்காக அவர் வாழவேண்டும் என்றும், இவ்வாறு வதந் 'தீ' யைப் பரப்புவது அவர்களது இரண்டு குழந்தைகளின் வாழ்வைப் பாதிக்கும், எனவே தவிர்க்கவும் என்று அவரது உறவினர் நேற்று கேட்டுக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கும் செய்தியைக் கேட்டு! இதிலிருந்து அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்போம்!

    பதிலளிநீக்கு
  13. தற்கொலைக்கு முயலும் ஒவ்வொருவருக்கும்,அந்தக் கடைசி நேரத்தில் ,அவர்கள் வருந்தும் அந்தக் கணத்தில் ,பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்;

    அவர்கள் மீண்டும் அந்த தற்றைச் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
    //பதிவு நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  14. நானும் அந்த செய்தியை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். ஏதோ தெரிந்தவர் ஒருவர் இறந்தது போன்ற ஒரு உணர்வு. நீங்க சொன்னது போல கடவுள் இனி தற்கொலை செய்ய முயலும் அனைவரையும் கடைசி நேரத்தில் மனதை மாற்றி வாழ செய்ய வேண்டும். எவ்வளவோ ஈன பிறவிகள் இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது இவரை போன்ற நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டதை நினைக்கும்போது மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு