தொடரும் தோழர்கள்

வியாழன், மார்ச் 05, 2009

ஒரு வரலாறு

76 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படிப்பதற்காகச் சென்னை சென்று ,படிப்பைத்தொடர முடியாமல், 14 வயதில் தன்னை விட 14 வயது பெரியவரான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, 15 வயதில் முதல் குழந்தைக்கும் 26 வயதில் ஆறாவது குழந்தைக்கும் தாயாகி, 32ஆவது வயதில் கணவனை இழந்து, நிர்க்கதியாகிப் பெற்றோராலும் சரியாக நடத்தப்படாமல் ,குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கி, எதிர் காலமே ஒரு பெரிய கேள்விக்குறியாகிப்போன ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப்பாருங்கள்.அந்த நிலையில் குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி, அவர்களின் கல்வி, திருமணம் போன்றவற்றைக் குறைவின்றி நிறைவேற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைவதற்கு அந்தப்பெண் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்?

அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது.இப்போது,90 வயதிலும்,சமையல் உள்பட வீட்டு வேலைகளைத் தானே செய்து வரும்,மன உறுதி கொண்ட பெண்மணி.சிறிய இன்னல்கள் வந்தாலும் சோர்ந்து போகும் பலருக்கு இந்தக்கதை ஊக்கம் தருவதாக அமையும்.

இக்கதையை அப்பெண்மணியின் அனுமதியின்றியே எழுதத்துவங்குகிறேன்.ஆனால் அவர்கள் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.அதுவே என் பலம். என் வரம்.என் வெற்றிக்கு ஆதாரம்.
இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.
பயணம் ஆரம்பம் .

6 கருத்துகள்:

  1. டாக்டர் ருத்ரன் அவர்களே,
    தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் அந்த வரலாறு வர வில்லையே ?... introduction ரொம்ப நல்லா , ஆர்வத்தை தூண்டும் படி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. எழுதப் புகுந்தது ஒரு வரலாறு அல்லவா?சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும்.(உண்மை என்னவென்றால், சில நாட்களாக ஒரு சிந்தனைத் தேக்கம் ஏற்பட்டு விட்டது.)உங்கள் பின்னூட்டம் என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறது. தொடங்குகிறேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் பித்தன் - அருமிஅயான அறிமுகம் - வரலாறு துவங்கட்டும் - தொடர்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. cheena (சீனா) கூறியது...

    //அன்பின் பித்தன் - அருமிஅயான அறிமுகம் - வரலாறு துவங்கட்டும் - தொடர்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//
    தொடர்வேன்.அது என் கடமை!

    நன்றி சீனா.

    பதிலளிநீக்கு