தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 21, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?...என் பதில்கள்!



கெளம்பிட்டாங்கய்யா,கெளம்பிட்டாங்க!

கொஞ்சநாளா  யாரும் கெளப்பலையேன்னு பாத்தேன்.

இப்பத் திரும்பவும்  நல்லாக் கெளப்பறாங்கய்யா பீதியை!

சிவனே என்று இருந்த என்னை,செல்லத்தாத்தா,லொள்ளுத்தாத்தா என்றெல்லாம் அழைக்கும் பிரியமான பேத்தி அம்பாளடியாள் இந்தச் சிக்கலில் மாட்டி விட்டு விட்டாள்.

பேத்தியின் அன்புக் கட்டளையை மீற முடியுமா?

 1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிக்கேட்டால் என்ன பதில் சொல்வது? அதைப் பற்றி யெல்லாம் நினைக்கவே இல்லை.....
உண்மையில் நூறு பேருக்காவது அன்னதானம் செய்து கொண்டாட விரும்புவேன்

2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகுறீர்கள் ?..

கற்றது கைம்மண்ணளவு;கல்லாதது உலகளவு!
(மிருதங்கம் கற்றுக்கொள்ளலாமா என யோசிக்கிறேன்)

3.கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது ,எதற்காக ?.

இதை எழுதும்போது கூடச் சிரித்துக் கொண்டேதான் எழுதுகிறேன்-என்னைப்போய் தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறாளே பேத்தி என!-
இதற்கெல்லாம் கணக்கு உண்டா என்ன?!



4.24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....


தியானம்?!

5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....

ஒன்றென்றிரு—(இருவரும் ஒன்றென்றிரு;நமக்கு ஒன்றென்றிரு!)

 6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...

என் பிரச்சினையையே என்னால தீர்க்க முடியல;இதில மன்னரின் பிரச்சினையை நான் எங்க தீர்க்கப் போறேன்?!
தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் போதாதா?

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...

அம்மா; அண்ணா,அறிவு,ஆண்டவன்!

 8.உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?...

.அதனால் நல்லது நடந்தால் சும்மா இருப்பேன்.இல்லையெனில்அந்த ஆளைப் பற்றிய தவறான செய்தியை நான் பரப்பி விடுவேன்.:)))...
உண்மையில் ஒதுக்கித் தள்ளுவேன்!


9உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


 துணையில்லா வாழ்வை எதிர்கொள்ளும் துணிவை வளர்த்துக் கொள்ளச் சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

படிப்பேன்,பாட்டுக்கேட்பேன்,டிவி பார்ப்பேன்,இணையத்தில் மேய்வேன், படுப்பேன், எழுவேன்,..... படிப்பேன் ,பாட்டுக்கேட்பேன்,டிவி பார்ப்பேன்…………………..!!

நான் யாரையும் அழைக்கப்போவதில்லை!

அனைவரும் வருக!

11 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிலை மிகவும் வித்தியாசமான முறையில் அளித்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஆஹா ...பேச்சில் (அறிவு சார்ந்த நற் கருத்துக்கள் உள்ளடங்கி உள்ளன !!)
    முதுமையின் மூப்புத் தெரிகிறதே !(பேச்சில் மட்டும் தான் :)) )
    இப்போதைக்கு பதினாறு வயது நிறைந்த என் லொள்ளுத் தாத்தாவிற்கு 100 வது
    வயது நடக்கும் போது ஒட்டு மொத்த வலைத்தள உறவுகளின் சார்பாக இந்தக்
    குட்டிப் பேத்தி ஓர் அன்புப் பரிசைக் கொடுப்பாள் ஆதலால் நூறு வயசு வரைக்கும்
    இந்தத் தாத்தா இன்று போல் என்றுமே இளமை அழகும் மகிழ்வும் மாறாமல் வாழ
    வேண்டும் என்று அந்த இறைவனுக்கே கட்டளை இடுகிறாள் .அன்பால் ஆகாதது
    எதுவும் இல்லை அன்பிருக்கும் வரைக்கும் அகிலமே எமது கைக்குள் என்று
    நம்புபவள் ஆச்சே அது தான் கடவுளுக்கும் கட்டளை இடுகிறாள் :)))))))) .மிக்க நன்றி
    தாத்தா இந்தப் பேத்தி சொல் தட்டாமல் நடக்கும் இன்னும் ஒன்று இரண்டு தாத்தாமார்
    உள்ளனர் அவர்களும் என்ன சொல்கின்றார்கள் பார்ப்போமா ?..முதலில் சுப்புத் தாத்தா
    https://www.youtube.com/watch?v=GCUxhCo48iA கேட்டு ரசிங்கள் என் செல்லத் தாத்தாவே .

    பதிலளிநீக்கு
  3. கரெக்டா சொன்னீக ...

    பவர் கட் போது தியானம் செய்யலாம்.

    பூஜ்ய ஸ்ரீ ரவி ஷங்கர் கூட அதே அதே தான் சொல்லி இருக்காரு.

    Through silence, our internal abilities come forth. Everyone should meditate for some time regularly. - Sri Sri Ravi Shankar


    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. // ஒன்றென்றிரு...//

    ஆகா... பாராட்டுக்கள் ஐயா... மன்னிக்கவும் இளைஞரே...

    பதிலளிநீக்கு
  5. முதலில் யாரையும் இந்த தொடர் பதிவிட அழைக்கப்போவதில்லை என்றதற்கு நன்றி!. கேள்விகள் கேட்டுவிடலாம். ஆனால் பதில் சொல்வது கடினம். ஆனால் தங்களுக்கு அது ஒரு குழந்தை விளையாட்டுப் போல.எனபது தெரிந்தது தானே!

    பதிலளிநீக்கு
  6. முத்துக்கு முத்தாக
    பத்துக்குப்க பத்தாக
    கேள்வி - பதில்
    நன்றாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  7. "ஒரு இளைஞனைப் பார்த்து இப்படிக்கேட்டால் என்ன பதில் சொல்வது?"

    ஆரம்பமே அமர்க்களம் !

    " என் பிரச்சினையையே என்னால தீர்க்க முடியல;இதில மன்னரின் பிரச்சினையை நான் எங்க தீர்க்கப் போறேன்?!
    தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம். இந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் போதாதா? "

    நகைச்சுவையா ஆரம்பிச்சி தொட்டுட்டீங்க !

    ( ஐயா ! என்னையும் இதுல இழுத்துவிட்டுட்டாங்கய்யா... நேரமிருந்தா இந்த சாமானியனோட பேட்டியையும் படிச்சி பாருங்களேன் ! )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான பதில்கள். குறிப்பாக ஒன்பதாவது கேள்விக்கான பதில் மிக அருமை

    பதிலளிநீக்கு