ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்
பழகத்தான் வேண்டும்
பழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்.
சித்திரமும் கைப் பழக்கம்;
செந்தமிழும் நாப்பழக்கம்.
கை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;
நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்;
மனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்.
நாமெல்லாம் பழகி விட்டோம்-
ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்
புரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் சகித்துக்கொள்ள!
சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம் சகித்துக் கொள்ள!
எல்லோரும் ஏசுவா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!
நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!
எளியோரை வலியோர் வாட்டினால்
வலியோரை வாட்ட வாராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
வாங்க பழகலாம்!!
(மீள் பதிவு)
உண்மைகள் - இன்றைக்கு...!
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குஇக் காலத்திற்குத் தேவையான பகிர்வு .ரௌத்திரம் பழகத் தான் வேண்டும்
பதிலளிநீக்குஎன்றால் நீங்கள் சொன்னது போல தவறு செய்யாமல் மறு கன்னத்தைக்
காட்டும் அவசியத்தைத் தடுக்கும் விதமாக ரௌத்திரம் பழகத்தான் வேண்டும் .
சிறப்பான சிந்தனையை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி ஐயா என்
தளத்தில் ஒரு காதல் கதையின் தொடரை எழுதி முடித்துள்ளேன் இதற்கு
தங்களின் மிகச் சிறந்த கருத்தினை எதிர் பார்கின்றேன் முடிந்தால் வாருங்கள்
ஐயா . http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_6904.html
கண்டிப்பாகப் படிக்கிறேன்
நீக்குநன்றி அம்பாளடியாள்
பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சொல்லிவிட்டீர்கள். நான் தயார்.
பதிலளிநீக்குநன்று;நன்றி
நீக்கு/எளியோரை வலியோர் வாட்டினால்
பதிலளிநீக்குவலியோரை வாட்ட வாராது இன்று தெய்வம்!/ பிறப்பொக்கும் என்று வாய் கிழியக் கூறும் நாம் நம் சமூகத்தில் காணும் அவல நிலைக்குக் காரணம் கண்டு களையாமல், ஏற்ற தாழ்வுகளுக்குத் துணைபோகும் நிலைமையை கண்டும் காணாமல் கையாலாகாத்தனத்துடன் வாழ்கிறோம். வலியோர் விழிப்புற்று எழுந்து ரௌத்திரம் பழகினால்......... நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது ரத்த ஆறே ஓடலாம். ........!. !ரௌத்திரம் பழகும் முன் காரண காரியங்களை அலசி ஆராய்ந்து களைய முனைவோம்.
நன்றி ஜி.எம்.பி சார்
நீக்குபழகிடுவோம்,ரௌத்திரம் தானே?பிசுக்கோத்து!ஹி!ஹி!!ஹீ!!!
பதிலளிநீக்குஅவ்வளவுதான்!
நீக்குநன்றி
எளியோர்க்குத் துணை போக
பதிலளிநீக்குஉடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
வாங்க பழகலாம்!!
நிச்சயம் பழகத்தான் வேண்டும் ரௌத்திரம்..!
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குrally call nanru.
பதிலளிநீக்குநன்றி அப்பதுரை
நீக்கு//எளியோரை வலியோர் வாட்டினால்
பதிலளிநீக்குவலியோரை வாட்ட வாராது இன்று தெய்வம்!
எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!//
சிறப்பான வரிகள்.
நன்றி ஆதி வெங்கட்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தங்களின் கருத்து பழைய தத்துவப்பாடல்களில் சொல்லிய கருத்துகளைப்போல இன்றைய காலத்துக்கு மட்டுமல்ல வருங்காலத்திற்கும் உரிய வகையில் உள்ளது.... வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குமீள் பதிவென்றாலும் மீண்டும் ரசித்த பகிர்வு.......
பதிலளிநீக்கு