முத்தம்!!
சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?
பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.மங்களூரில் ஒரு கிருத்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு ’மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)
முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?
வள்ளுவர் சொல்கிறார்---
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.”
மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).
இது உண்மையா?விவாதம் தொடங்கட்டும்!
பல முத்தங்களை முயற்சி செய்தவன் என்கிற வகையில் ஒரு சிறு ஆராய்ச்சியே செய்திருக்கிறேன். முத்தத்தின் ருசியும் கவர்ச்சியும் அது கொடுக்கப்படும் சூழ்நிலையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு திருட்டு முத்தம் எவ்வளவு ருசியானது என்பது, அதைக் கொடுத்தவருக்கும், பெற்றவருக்கும் மட்டுமே தெரியும்! திருமணம் ஆகாத என்னைக் கேளுங்கள்! ஆனாலும் நம்மில் பல பெண்பாலருக்கு (மேல் நாட்டினரைப் போல) உதட்டுடன் உதடு சேர்க்கும் முத்தங்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை (”வேண்டாமே”) என்பது என் சொந்தக் கண்டுபிடிப்பு - இல்லை என்று மறுப்பவர்கள், பாக்கியவான்கள்!
பதிலளிநீக்குRSK அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உங்கள் அனுபவங்களைத் தொகுத்து,ஒரு கதை போல எழுதலாமே-”இதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே;யாரையும் குறிப்பிடுவன அல்ல”என்ற முன்னுரையுடன்!
கற்பனை என்று வேண்டுமானால் கதைக்கலாம், யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது என்பது அடிப்படை உண்மை!அத்தனை பேர்கள், (முக்கியமாக) அத்தனை முத்தங்கள்! இது எப்படி இருக்கு?!
பதிலளிநீக்குதூள்!!
பதிலளிநீக்கு