ஆயிற்று.
இன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக்
காரியங்கள் முடிந்து விட்டன.
நம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம்
தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு
செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.
அழுகைகள் குறைந்து விட்டன.
பேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே
ஆக வேண்டும்?!
இதுதான் வாழ்க்கை!
எந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு
மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.
என் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள்
குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டுவேலை
செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச் சிரிப்பு வந்து விட்டதாம்!
அதை அன்று இரவு அவள் விவரிக்க
எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.
இதுதான் வாழ்க்கை!
என் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார்
என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில்
வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத்
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர்
இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள்
துயரைக் குறைக்க முயன்றானாம்.
அவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது
அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக இந்தியா செல்கிறார்கள் என்று!
இதுதான் வாழ்க்கை!
இறுதியாக ......
"ஊரெலாம்
கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே”--(திருமந்திரம்)
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்மூழ்கி நினைப்பொழிந்தார்களே”--(திருமந்திரம்)
இதுதான் வாழ்க்கை!
