தொடரும் தோழர்கள்

திங்கள், பிப்ரவரி 02, 2015

டான்ஸ் சாமியார்!



அவரைப்பற்றி நான் முதலில் அறிந்தது தொலைக்காட்சியின் மூலமே!

அவர்களே  தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.

அதில்தான் அவரைப் பார்த்தேன்;அவர் பேசியதைக் கேட்டேன்;பேசிக் கொண்டே ஆடும் நடனத்தையும் ரசித்தேன்

அவர் பெயர் சிவசங்கர் பாபா

பாபா ஆகும் முன் வெறும் சிவசங்கர்.

படித்தவர்.

போக்குவரத்து துறையில் ஈடுபட்டிருந்தவர்.

பின்னாளில் பாபா ஆகி விட்டவர்.

வழக்கும் போல் எனக்குள் ஓர் உந்துதல்-போய்ப் பார்க்க வேண்டும் என்று.

அப்போது அவர் சாஸ்திரி நகரில் அல்லது பெசண்ட் நகரில் இருந்தார் என நினைவு.அதற்கு முன்பு மண்ணடியில் இருந்தாராம்

ஆனால் நான் போய்ப் பார்ப்பதற்குள் நீலாங்கரையில் பெரிய ஆசிரமத்துக்குப் போய்விட்டார்

ஒரு நன்னாளில் நீலாங்கரை ஆசிரமத்துக்குச் சென்றேன்

ஆண்டு 1996/97

பக்தர் ஒருவர் வாசிலில் அமர்ந்து வருபவர்களின் பாதணிகளை சுத்தம் செய்தவாறு இருந்தார்-முதல் எண்ணம் சிறப்பாக அமைய வேண்டாமா?

நீங்கள் தயார்ப் படுத்தப்படத் தொடங்கி விட்டீர்கள்

உள்ளே சென்றேன்

ஒரு சிறிய கூடத்தில் அமரச் செய்து ஒரு சாய்வு நாற்காலியும் போட்டிருந்தனர்.

எனக்கு மிக மகிழ்ச்சி அருகில் பாபாவைப் பார்க்கப் போகிறோம் என.

ஆனால் சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய அரங்குக்கு மாற்றப்பட்டோம்.

மேடையில் பாபா வருவார் எனத் தெரிந்தது.

காத்திருப்புக்குப் பின் அவர் வந்தார்.

அவரை முதலில் பார்ப்பவருக்கு அவர் ஒரு சாமியார் என்றே தோன்றாது,கிராப் தலை,

சாதாரண பைஜாமா ஜிப்பா!

முதலில் ஓரிரு பெரிய  மனிதர்கள் அவர் புகழ் பாடிப் பேசினர்.

அதன் பின் பாபா பேசினார்.

என்ன ஏமாற்றம்?அன்று அவர் டான்ஸ் ஆடவே இல்லை!

அவர் பேசி முடித்த பின் ஒவ்வொருவாக மேடைக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டனர்.

என் முறை.

சென்றேன்

கோரிக்கை ஒன்றைச் சொன்னேன்

கையில் அருகம்புல்லும் அட்சதையும் கொடுத்து இதை வைத்துக் கொண்டு முயலுங்கள் 
என்றார்.

உப்புச் சப்பு இல்லாத நிகழ்வு

சாதாரண மூன்றாம் மனினைச் சந்திப்பது போன்ற ஒரு நிகழ்வே!

அன்று அவர் சொன்னார்-நாடி ஜோதிடத்தில் அவரைப்பறி சிவசங்கர ஜோதி என்று சொல்லியிருக்கிறது ;காஞ்சி மகாப் பெரியவரே  இவரைப் பற்றி சொல்லியிருக்கிறார்;இன்னும் மூன்றாண்டுகளில் உலகத் தலைவர்கள் எல்லாம் ஆசிரமத்தில் வந்து காத்திருப்பர் என்று

 எத்தனையோ மூன்றாண்டுகள் கழிந்து விட்டன!

யாகவா முனிவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை

இவர்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட விவாத்த்தில் கலந்து கொண்டது பிரசித்தம்.

அதை விடப் பிரசித்தம் விவேக்கும் மயில்சாமியும் ஒரு சினிமாவில் இந்த நிகழ்ச்சியைக் கிண்டல் செய்த காட்சி!

எல்லாவற்றையும் அதுவே சொல்லி விடுகிறது.

சில காணொளிகள் கீழே!



 தொலைக்காட்சியில் நடந்த உண்மைச் சந்திப்பின் காணொளி கிடைக்கவில்லை!

14 கருத்துகள்:

  1. உண்மை இப்போது அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. எதோ ஒருதிறமை . கூட்டம் கூடுகிறது. தொலைகாட்சியில் அவருக்கு பால் அபிஷேகம். பெரிய ஆஷ்ரமம் . புரியாத புதிர் பணம் கொட்டுகிறது. எல்லாம் விவேக் பாவாடை சாமியார் சகுனி பட சாமியார் மக்கள் ஏமாறுகிறார்களா? பாம்பாட்டி மயக்கமா/.ஹிந்து சாமியார்களே ஒரு புதிர். பழனியில் ஈசுவ்ரபட்டர். .சமாதி அடையும் வரை தெருவில் நடமாட்டம். இறந்தபின் பாரதியார் மணிமண்டபம்போல் . கவிஞருக்கும் உண்மையான சாமியாருக்கும் இறந்த பின் அவருக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி முனிவராகி மணிமண்டபம் ஒப்பந்தகாரர் கையூட்டு நல்ல காசு. பாவம் மூலவர்கள். இதுதான் இந்தியா. இறந்தவர்கள் சமாதிக்கு மாலை போட்டே மந்திரி முதல் மந்திரி பிரதமர். காமராஜர் ஆட்சி. எனக்கு பங்களா கருப்பு ஊழல் பணவாசம். ஏமாறும் மக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மைச் சந்திப்பு மயில்சாமியும் விவேக்கும் செஞ்சதை விட பெரிய காமெடியா இருக்கும்ணு தோணுது தல... கெடக்காமப் பூடுச்சே...

    பதிலளிநீக்கு
  4. இவரின் ஒரிஜினல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, டூப்ளிகேட் விவேக் மயில்சாமி காமெடி இரண்டையும் நான் பார்த்திருக்கிறேன். டூப்பை விட ஒரிஜினல் தான் டக்கர்

    பதிலளிநீக்கு
  5. ஐயா நீங்களும் ஒரு சாமியாரையும் விடலை போலயே....

    தமிழ் மணம் 2 ஐயா அருந்ததியை காண வருக.....

    பதிலளிநீக்கு
  6. முன்பு எப்போதோபர்ர்த்த நினைவு இருக்கிறது .நல்ல காமெடிதான்.
    மேடவாக்கத்தில் யாகவா முனிவர் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. முதல் காணொளியை பார்த்ததும் நினைவுக்கு வந்தது ...உலக மகா நடிகன்டா:)
    த ம 3

    பதிலளிநீக்கு
  8. எத்தனை மூன்றாண்டுகள் என்றாலும் ம்ஹீம்...

    பதிலளிநீக்கு
  9. தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  10. (உ)டான்ஸ் சாமியார் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. இதுபோன்றவர்கள் ‘பிரபலம்’ ஆவதற்கு காரணம் மக்களின் கண்மூடித்தனமான/வெறித்தனமான நம்பிக்கைதான். என்று தணியும் இந்த மோகம் என்று கேட்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. தொடர்ந்து சந்திக்கும் சாமியார்கள்..... :) ரசித்தேன் தல!

    பதிலளிநீக்கு
  12. சாமியார் என்றாலே சுவாரஸ்யம்தான் போலிருக்கிறது. ஒரிஜனல், டூப்ளிகேட் இரண்டு நிகழ்ச்சிகளையுமே டீவியில் பார்த்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும்போது உங்களுடைய எல்லா சாமியார் பதிவுகளையும் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு