தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 29, 2011

ஹனுமாரும் வடைமாலையும்!


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல்  ‘ஜிவுஜிவு’  என்று தோற்றமளித்த சூரியன்அவரை மிகவும் கவர்ந்து விட்டது.  மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனைசாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.  வாயுபுத்திரன் அல்லவா அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார்.  வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.  பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.  வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. 

ஆனால், அனுமன் சென்ற வேகத்தில்  ராகு பகவானால் செல்ல முடியவில்லை.  சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.  இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். 

அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.  இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.  அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அதைதான் உளுந்தினால் ஆன வடை மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். என்வேதான், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்  உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்ராகு தோஷம் நிவர்த்தி ஆகி  இடும் என்று கருதப்படுகிறது. 

”அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.”

55 கருத்துகள்:

  1. அருமையான ஓரு தகவலை அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  2. இதுவரை அறியாத அரிய தகவல்
    பதிவாக்கித்தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  3. நான் கூட சின்ன வயசுல சந்திரனை அப்பம்னு நினைச்சு பாஞ்சு போய் பிடிச்சேன். சுடவே யில்லை

    பதிலளிநீக்கு
  4. ஹனுமனை பற்றி தெரியாத தகவலை பற்றி தெரிந்து கொண்டேன். நல்லதொரு பகிர்வு. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. Good Information. But, anuman sooriyanai vilungiyathal than than balam maranthu pogum sabam petran enbathaiyum inaithirunthal nandraga irunthirukkum. Nice Boss!

    பதிலளிநீக்கு
  6. அனுமனுக்கு வடைமாலை அணிவிப்பதைப் பற்றிய விவரம் அறிந்தேன்.. நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. ஆஞ்சநேயர் அருள் கிட்டட்டும் ....

    பதிலளிநீக்கு
  8. அனுமானுக்கு உளுந்து வடை மாலை சாற்றுவதின் காரணம் அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. @jaisankar jaganathan
    பெரிய ஆளுதான் நீங்க!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @கணேஷ்
    சொல்லியிருக்கலாம்(தெரிஞ்சால்)!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. மன்னிக்கவும் ஐயா நேற்று நெட் கொஞ்சம் பிரச்சனை ஆகி விட்டது ,அதனால் பதிவும் போடவில்லை நான்

    இன்றைய பதிவு அறிய தகவல் ஐயா

    த.ம 7

    பதிலளிநீக்கு
  12. M.R கூறியது...

    // மன்னிக்கவும் ஐயா நேற்று நெட் கொஞ்சம் பிரச்சனை ஆகி விட்டது ,அதனால் பதிவும் போடவில்லை நான்

    இன்றைய பதிவு அறிய தகவல் ஐயா

    த.ம 7//
    கஷ்டம்தான்!
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  13. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //இன்று என் வலையில்

    வேலாயுதம் – விஜய்க்கு டாப்பா? அல்லது ஆப்பா?//
    பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  14. சொல்லின் செல்வன் என்று கம்பநாட்டாழ்வாரால் பாடப்பட்ட அனுமன் குறித்துப் பல அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  15. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    //ஒரு நல்ல தகவல்.,
    நன்றி..//

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அனுமன் வடையில் இவ்வளவு உள்ளதா.. வடையை மட்டுமே சுவைத்த நமக்கு இச்செய்தியும் சுவையனதே .. வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  17. ஹனுமனை பற்றி தெரியாத தகவலை பற்றி தெரிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  18. நல்ல தகவல்
    அப்படியே அனுமார், சனிஸ்வரர் தொடர்பு பற்றியும்
    முடிந்தால் பகிருங்களேன்

    பதிலளிநீக்கு
  19. தெரியாத .... இதுவரை அறிந்திராத
    தகவலுக்கு நன்றி ஐயா ...

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்!
    “அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன வடை மாலைகளாக”
    என்ற தங்கள் வரிகள் மூலம் உளுந்த வடையில் மட்டும் ஏன் ஓட்டை போடுகிறார்கள் என்ற காரணம் தெரிந்து விட்டது.1.பாம்பு உடல் போல் இருக்க வேண்டும் 2.கயிற்றில் மாலையாக கோர்க்க வசதியாக ஓட்டை வேண்டும்

    பதிலளிநீக்கு
  21. @ராம்ஜி_யாஹூ
    முயற்சி செய்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. நன்றி. ஒரு திருத்தம். ஆரியர்க்காக ஏகி அல்ல. ஆரூயிற்காக ஏகி என்பது சரி.

    பதிலளிநீக்கு
  23. T G Ramamurthy கூறியது...

    // நன்றி. ஒரு திருத்தம். ஆரியர்க்காக ஏகி அல்ல. ஆரூயிற்காக ஏகி என்பது சரி.//
    இதில் இரண்டு/மூன்று பாட பேதங்கள் இருக்கின்றன. ”ஆருயிர்க்காக”,
    ”ஆருயிர் காக்க”, ஆரியர்க்காக” என்றெல்லாம்.ஆரியர்க்காக என்பதும் இராமனைக் குறிக்கும் எனச் சொல்வர்.
    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் வலைபூவை பிரபலபடுத்த இதில் இணையலாமே ..
    வலைதோட்டம்

    பதிலளிநீக்கு
  25. அனுமாரின் வடை மாலை பற்றிய பின்னணியை அறிந்து கொள்ள உங்களின் இப் பதிவு உதவியிருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு