தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 25, 2015

நானும் ரௌடிதான்! 4



ரமேஷ் சர்மா கண்காணிப்பு  மேலாளரைக் கூப்பிட்டுக் கேஷ் எல்லாம் டேலி ஆகி விட்டது. டபுள் லாக்லே வைக்க ரெடி என்றான். சிங்கிள் லாக் கேஷ் சரிபார்த்தாகி விட்டது.  கேஷ் புத்தகத்தில் டபுள்லாக் க்ளோஸிங் பேலன்ஸ் டினாமினேஷன் வாரியாக முத்துமுத்தாக எழுதப் பட்டிருந்தன. 

காலை கேஷ் எடுக்கும் போது ஒரு வெள்ளை பேப்பரில் வெளியே எடுக்கப்பட்ட கேஷ் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படும். தலைமை கேஷியர் அதை கேஷ் புக்கில் எழுது வார். அந்தக் குறிப்பு, கேஷ் டபிள் லாக்கிங் வைக்கப்படும் வரை கேஷ் புக்கி லேயே இருக்கும்.

கேஷ் ஸ்ட்ராங் அறையை அடைந்தது. 


உள்ளே வைத்த பிறகு இரும்பு பீரோவில் இருக்கும் கேஷை க்ளோஸிங் பாலன்ஸூடன் சரிபார்த்தார்கள். அப்போது 10 நூறு ரூபாய் கட்டுக்கள் குறைந்து காணப்பட்டது.

குறிப்புத்தாளை ஒப்பிட்டு போது வெளியே எடுக்கப்பட்ட  பணத்தில் ஒரு இலட்சம் குறைக்கப்பட்டிருந்தது. ஒரு 100 ரூபாய் பண்டிலை டபுள் லாக்கில் வைக்கும்படி ரமேஷ் சர்மா கொடுத்தது, கேஷ் ண் காணிப்பு மேலாளருக்கு ஞாபகம் வந்தது. அதை அவர் கேஷ் டிரங்க் மீது வைத்ததும் அவர் நினைவுக்கு வந்தது. அப்போது தலைமை அலுவலகத் திலிருந்து பொது மேலாளர் எஸ்.டி.டி - ல்ழைக்க, கிளை மேலாளர் இல்லாததால் இவர் ஓடினார். மற்றொரு டபுள்லாக் சாவி வைத்திருப்பவரை கூப்பிட்டு ஒரு இலட் சத்தை உள்ளே வைக்கச் சொல்லி தன் சாவியையும் கொடுத்து விட்டுப் பறந்தார். அங்கே தான் ஏதோ கசமுசா நடந்திருக்கிறது. அன்று வேலைப்பளு அதிகமாக இருந்ததால், இரண்டாவது அதிகாரி என்ன செய்தார் என்று முழுவதையும் மறந்து விட்டார் எவ்வளவு முயன்றும் நினைவு கூர முடிய வில்லை. அவருக்கு டென்ஷன் அதிகமாகி தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. அவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்த போது, உத்தமகுமார் டபுள்லாக் ரூமில் நுழைந்தார். அப்போது கிளையில் இருந்தவர் அம்மூவரே
தீபாவளி ஷாப்பிங்கிற்கு மற்றவர்கள் அன்று 6 மணிக்கே பர்மிஷன் வாங்கிக் கொண்டு போய் விட்டனர் வங்கி மேலாளர் விஷயத்தை உடனடியாக கிரகித்துக் கொண்டு அதிவேகமாக இயங்கினார்.  


பத்து நிமிடங்களில் அந்த வங்கியின் மிகப்பெரிய வாடிக்கையாளர் ஒரு லட்சத்தை அவர்கள் விரும்பிய 100 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 10 கட்டுக்களாக கொடுத் தார். மற்ற வழிமுறைகள் ஒழுங்காக முடிக்கப்பட்டன. இரண்டாவது டபுள் லாக் அதிகாரி டீ சாப்பிட்டு விட்டு, அவருடைய டபுள் லாக் சாவியை முறைப்படி உத்தம குமாரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினார்.


போகுமுன் அவருக்கு தெம்பு வந்தது. அந்த 100 ரூபாய் பண்டில் பெட்டிமேலிருந்து தவறி கீழே விழுந்தது அட்டெண்டர். லீலாதாரை எடுத்து டிரங்கில் போடச் சொன்னேன். இருவரும் ஸ்டாரங் அறைக்கு போனோம். பெட்டியை அப்படியே உள்ளே வைச்சுட்டு பெட்டிய பூட்டிட்டு, ஸ்டாராங் ரூமையும் பூட்டிட்டு வந்துட்டேன் என்று குழம்பினார். எல்லாம் சரியாயிடுத்தே வீட்டுக்கு போய் ஒய்வெடுங்கன்னுஉத்தம் தன் காரிலேயே வீட்டுக்கு அவரை அனுப்பி வைத்தார். இதைப் பற்றியார்கிட்டேயும் பேசாதீங்கன்னு உத்தரவிட்டார்.


அவர் போனவுடன் உத்தம குமார், “நம் இருவர் பெயரும் பதவி உயர்வு லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. இந்த கேஷ் விஷயம் முடிஞ்ச விஷயமாக இருக்கட்டும் என்றார். இருவரும் கைகுலுக்கி சிகெரட்டை பற்றிவைத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்தனர்.


அன்று இரவு, இரண்டாவது கேஷ் அதிகாரிக்கு ஸ்ட்ரோக்வந்து புது டெல்லி கோல் மார்கெட்டில்உள்ள டாக்டர் ராம் மனோஹர் லோகியாஆஸ்பத்திரியில் ஐ.சி.யுவில் அட்மிட் ஆனார். சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் உயிர் துறந்தார். 


கேஷ் மறைவு அவர் உயிர் துறப்பதற்கு சிறு காரணமே.

நீரிழிவு நோய் கட்டுக்கடங்காமல் இருக்கும் போது ரிஷி கொடுத்த ஒரு பாக்கெட் இனிப்பை அவரே சாப்பிட்டார். என்ன ஆகும்? இது போல பல செய்யக் கூடாதவைகளை செய்து பரமபதம் அடைந்தார்.

(தொடரும்)

17 கருத்துகள்:

  1. எதிர்பார்த்துக் காத்திருக்கும் தங்கள் பதவி உயர்வு பாதிக்கப்படாத வண்ணம், ஏதேதோ மாற்றுவழிகள் செய்து, முரட்டுக் கஸ்டமர் ஒருவர் தயவால், அன்றைய கணக்கினை நேர் செய்து பொட்டியை (கேஷ் ஸ்ட்ராங் ரூமை) மூடிவிட்டுச் சென்றுள்ளார்கள். மேலும் என்ன நடக்குமோ எனத்தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளோம்.

    பதிலளிநீக்கு
  2. வங்கியில் பணி புரிவோருக்கு இது போன்று எத்தனையோ ‘கெட்ட’ நிகழ்வுகள். எப்படி அந்த வாடிக்கையாளருக்கு அந்த ஒரு இலட்சம் திருப்பி தரப்பட்டது என அறிய காத்திருக்கிறேன் ?

    பதிலளிநீக்கு
  3. பதவி உயர்வு நேரத்திலா இப்படி நடக்கவேண்டும் அடக் கடவுளே....

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Sky-Special.html

    பதிலளிநீக்கு
  5. திருடன் பிடிபடுவானா, மாட்டானா?

    பதிலளிநீக்கு
  6. அடடா! ஒரு உயிர் போய் விட்டதா?
    பதவி உயர்வுக்காக எப்படியோ நிஜத்தினை மறைத்து எப்படியோ அச்சூழலை சரி செய்ய தேவை உணர்ந்து உடனடி உதவி கிடைத்ததும் பெரிய விடயம் தான்.

    வங்கி அதிகாரி என்பதால் ஒரு இலட்சம் என்பது அவருக்கு பெரிய தொகையாக இல்லாமல் தன் சொந்த பணத்தினை கொடுத்து சரி செய்து விடுவாரோ என்னமோ? இனி என்னாகும்?

    பதிலளிநீக்கு
  7. அச்சச்சோ ஒண்ணு புட்டுக்கிச்சா அப்போ மாரிமேல சந்தேகம் வராது போல இருக்கே ம்ம் பார்க்கலாம் முடிவை
    அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  8. அடப்பாவி! இந்த அதிகாரிங்க இப்படியா பண்ணுவாங்க? தங்கள் உயர்பதவிக்காக திருடனைத் தப்ப விடுகின்றார்களே! கேஷ் அட்ஜஸ்ட் செய்து கேசை இப்போது க்ளோஸ் செய்தாலும்....அந்த கஸ்டமருக்கு இவர்கள் ஒரு லட்சம் கொடுக்க வேண்டுமே? எப்படி...

    ஏன் மாரி மேல் சந்தேகம் வரவில்லை....சர்மாவிற்கு வந்திருக்க வேண்டுமே...அவர்தானே தனக்கு தூசி அலர்ஜி என்று மாரி ஸாரி ரிஷி சுத்தம் செய்கிறான் என்று அனுமதிக்கின்றார்.

    ம்ம்ம்ம்ம் தொடர்கின்றோம் முடிவைத் தெரிந்து கொள்ள

    பதிலளிநீக்கு
  9. தொடருங்கள் ஐயா, முடிவை சீக்கிரம் எழுதிவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு