தொடரும் தோழர்கள்

புதன், மே 09, 2012

வெள்ளைக் குதிரை வீரனும்,வெங்கட்ராமனும்(நிறைவுப்பகுதி)


தூக்கம் கலைந்து கண் விழித்தாள் சாவித்ரி.

கடிகாரத்தைப் பார்த்தாள்.

வழக்கத்தை விட 30 நிமிடம் தாமதம்.

கட்டிலைப் பார்த்தாள்.

கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கக் கண்டாள்.

எழுந்து சென்று காலை வேலைகளைத் தொடங்கினாள்.

இனி 9 மணி வரை அவளுக்கு மூச்சு விட நேரம் இருக்காது.

ஒவ்வொரு வேலையாக நடந்தது.

குழந்தைகள் பள்ளிக்குப் போய் விட்டனர்.

கணவருக்கு ஓட்ஸ் கஞ்சி கொடுத்துவிட்டுத் தானும்  சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களைத் தேய்க்கப் போட்டுவிட்டு. கணவரின் கட்டிலுக்குக் கீழ் வந்து அமர்ந்தாள்.

இன்னிக்கு முகம் தெளிவா இருக்குன்னா.மூச்சுத்திணறல் குறைஞ்சிருக்கா?” கணவரைக் கேட்டாள்.

நேத்து ராத்திரி படுக்கும்போது இருந்தோட ஒப்பிட்டுப் பார்த்தா இப்ப ரொம்பத் தேவலைன்னுதான் சொல்லணும்என்றார் வெங்கட்ராமன்.

உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்னா.ஒரு வாரமாவே ஒரு கனவு. வெள்ளைக்  குதிரைல ஒரு வீரன் வந்து நம்மாத்து வாசல்ல நிப்பான். அப்புறம் போயிடு
வான்.நேத்து வந்தவன் எங்கிட்ட உங்க பேரைச் சொல்லி அவர் வீடு இது
தானான்னு கேட்டான்.எனக்குத்’ திக் ’ குன்னு ஆயிடுத்து. இது இல்ல,எதிர் வரிசைக் கடைசில இருக்கற வீடுன்னு பொய் சொல்லிட்டேன்.அவன் போயிட்டான்.”

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேலைக்காரப் பெண் வந்து விட்டாள்.

“அம்மா!உங்களுக்கு விஷயம் தெரியுமா.அந்தக் கடைசி வீட்டிலே ஒரு வயசானவர் ஒரு மாசமா இழுத்துக் கிட்டே கிடந்தாரே,அவர்  நேற்று ராத்திரி காலமாயிட்டாரு”

சாவித்ரி ஆடிப்போனாள்.மனதை என்னவோ செய்தது.ஒரு குற்ற உணர்வில் தவித்தாள்.முகம் வெளிறிப் போயிற்று.

அதைக்கவனித்த வெங்கட்ராமன் சொன்னார்”மனசைப் போட்டு அலட்டிக்காதே. எதுக்கும் நீ காரணமில்ல.போக  வேண்டிய உயிர்
போயிடுத்து.உன் கனவெல்லாம் ஒரு காரணம் இல்ல.இதெல்லாம் காகதாலியம்தான்.*போய் வேலையப் பாரு.”

(*காகதாலியம்—காக்கை உட்காரப் பனம்பழம் விழுதல்)

பின் வேலைக்காரியிடம் கேட்டார்”அவர் பேர் என்ன?”

“உங்க பேர்தானாம் ஐயா!”
......................................................................................................
சில கேள்விகள் எழுந்தன,அதற்கான விடையை மனோதத்துவ நிபுணர் பத்ரனிடம் கேட்டோம்.

கே.வழக்கமா க இறப்பு என்பது எருமையுடன்தான் சம்பத்தப் படுத்ப் படும்.இங்கு சாவித்ரி வெள்ளைக் குதிரையைக் கண்டிருக்கிறாள்.ஏன்?

ப.சாவித்ரி தன் கணவரை ஒரு மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்தி ருக்கிறாள் ஒரு ஹீரோ ஒர்ஷிப் என்றே சொல்லலாம்.எனவே எமன் அவர் உயிரை எடுக்க வெள்ளைக்குதிரையில் தான் வருவான் என்பதாகத் தோன்றியிருக்கிறது.ஒன்றை நினைவு கொள்ளுங்கள்.அந்தக்காலத்தில் ஹரிதாஸ் என்ற படத்தில் நாயகன் வெள்ளைக்குதிரையில் வருவான்.அது மிகப் பிரபலம்.

கே.அவள் கனவில் வந்தபடி நடந்தது....?

ப.அந்தக் கடைசி வீட்டில் ஒரு வயதானவர்  மிக உடல் நலக்குறைவால் இருப்பது அவளுக்கு முன்பே தெரிந்திருக்கும்.அப்படி வயதானவர் உயிருடன் இருக்கையில் ,45 வயதே நிரம்பிய தன் கணவர் இறந்தால் அது அநியாயம் என்று தோன்றியிருக்கும்.இது ஆழ்மனத்தில் தங்கி விட்டது. அதன் வெளிப்பாடே   அக்கனவு—அதாவது வீரனை அந்த வீட்டுக்கு அனுப்புவது. அதற்குப் பின் நிகழ்ந்தது ஒரு தற்செயலான இணைவுதான்,வெங்கட்ராமன் சொன்னது போல்!எப்படியும் இது ஒரு சுவாரஸ்யமான கேஸ்தான்!

..............................................................................

31 கருத்துகள்:

  1. //காகதாலியம் புது தகவல். நன்றி.. மனோதத்துவ ரீதியாக அருமையான ஆழமான கதை... :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... நிறைவான நிறைவுப் பகுதி. வெள்ளைக் குதிரை ஏன் என்ற என் கேள்விக்கு விடை தெரிந்ததில் மிக்க சந்தோஷம். ரசித்துப் படிக்க வைத்தது வெங்கட்ராமன் கதை. தொடரட்டும் இதுபோன்ற கதைகள்..!

    பதிலளிநீக்கு
  3. மரண பேதியை ச்சே ச்சீ பீதியை எதுக்கு தல கிளப்புறீங்க, ச்சே இனி என் கனவிலும் ஒரே வெள்ளை குதிரையா வரப்போகுது பாருங்க ஹி ஹி...!!

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை. அதே போல கனவை மனோதத்துவ ரீதியாக ஜட்ஜ்மெண்ட் செய்ததும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல முடிவு ... கடைசி வீட்டு வெங்கட்ராமனுக்கு.

    பதிலளிநீக்கு
  6. சில முடிவுகள் நம்மையும் காயப்படுத்தும் நம்மை அறியாமலே என்பதை உணர்த்திய பதிவு அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  7. எண்ணம் போல் வாழ்க.’ என்பார்கள்.அதுபோல சாவித்திரியின் எண்ணம்போல் தான் நடந்திருக்கிறது.நல்ல கதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நமது ஆழ்மனத்தின் வெளிப்பாடுதான் கனவு என நினைக்கிறேன்.

    சுவாரசியமாக இருந்தது கதை.

    //காகதாலியம்தான்.//
    ஒரு புது வார்த்தையை ஹெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நினைவின் வெளிப் பாடே கனவு என, எப்போதோ
    படித்த ஞாபகம்!
    முடிவு நன்று!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  10. அடிமனதின் கருத்துகளே கனவாய் வெளிவருதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  11. கதை நல்லாயிருக்கு...
    காகதாலியம் - முதல் முறை கேட்கிறேன்...
    புது வார்த்தை தெரிந்து கொண்டேன்...
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. நினைவுகளின் வெளிப்பாடே கனவு என்று உணர்த்தியது ..!

    பதிலளிநீக்கு
  13. அண்ணே இதுல இருந்து நான் புரிஞ்சிகிட்டது...பொண்டாட்டி புருசனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு புருசன் நடந்து கொள்ளனும்...இல்லன்னா..உள்ளாரதான் படுத்திருக்காரு...சீக்கிரம் கூட்டிகிட்டு போப்பான்னு இருப்பாங்க ஹெஹெ!

    பதிலளிநீக்கு
  14. சுவாரஸ்யமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. எங்கே பிராமணன் தொடரில் இறுதியில் சோவிடம் சந்தேகங்கள் கேட்பார் ஒருவர் ...அந்த பாணியில் இருந்தது ...vasu

    பதிலளிநீக்கு