தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 08, 2011

அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?!

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன.
--மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும்.

ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப்  போகிறதென்று.

உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர.

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது.

அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட  நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது.

அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது.

“என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை” என்று சொல்லிச் சென்று விட்டது.

அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.அது சொன்னது”நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்”

வருத்தத்தைக் கேட்க அது சொன்னது”எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்”

மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை.

அப்போது ஒரு குரல் கேட்டது “வந்து என் படகில் ஏறிக்கொள்”

ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர்.
அன்பு படகில் ஏறிக்கொண்டது.

படகு நல்ல தரையில் நின்றது.

அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது.

அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது “அது யார்?”

“காலம்” பதில் வந்தது.

“காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?”

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”

44 கருத்துகள்:

  1. மிக நல்ல பகிர்வு... காலத்திற்குத் தெரியாதது எது... :)

    பதிலளிநீக்கு
  2. காலம் தான் அன்பை உணர்த்தும் என்பதை அழகாக சொன்னது அருமை ஐயா

    த.ம 3

    பதிலளிநீக்கு
  3. உணர்சிகளுக்குள் நடந்த உணர்ச்சி விளையாடல்களை
    அருமையாக சொல்லி விட்டீர்கள்.
    காலம் எதையும் கணித்து தகுந்ததைச் செய்யும்
    என்று மெய்ப்பிக்கப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”

    "அன்பின் அருமை காலத்துக்குத் தெரியும்?!"

    காலம் கடத்தாமல் தெரியவைத்தால் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  5. அப்படி என்றால் அன்பை யாரும் விரும்புவதில்லையா?
    அருமையான வார்த்தை ஜாலம் கொண்ட கதைதான். ஆனாலும் குழப்பமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. மென்மையான நடை ஐயா..இரவு நேரத்து அமைதியில் வாசித்தது ஒரு கூடுதல் ஈர்ப்பு..

    இன்று என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

    பதிலளிநீக்கு
  7. அன்பே வெல்லும். நல்ல கருத்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  8. அன்பே வெல்லும். நல்ல கருத்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான விஷயம். அன்பின் மதிப்பு உணர்ந்தவர்களுக்குத் தெரியும். உங்கள் கட்டுரைகளின் மதிப்பு என் போன்றவர்களுக்குத் தெரியும். மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. // ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”//
    சத்தியமான வார்த்தை.நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”//

    நிஜம அய்யா,,

    பதிலளிநீக்கு
  12. இறுதிச் சொற்றோடர் இதயம் கவர்ந்து போனது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 13

    பதிலளிநீக்கு
  13. @சைதை அஜீஸ்
    அன்பின் அருமை புரிவதில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கண்ணில் நீர் கோர்த்து விட்டது தல, இதுதான் சத்தியம் அம்மா அப்பா உயிருடன் இருக்கும் போது தெரியாத அன்பு அவர்கள் மறைவுக்கு பின்தான் தெரிகிறது, உயிருடன் இருக்கும் அன்பு துணையின் அன்பு அவர்கள் பிரிவில்தான் தெரிகிறது, காலம் அதை சரியாக உணர்த்தி விடுகிறது இல்லையா...அருமை...!!!!

    பதிலளிநீக்கு
  15. அன்பே சிவம் அன்பே உலகம் அன்பே வாழ்வு. அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  16. ஆமாம்,அன்பை காலம்தான் உணர்த்த முடியும்.நன்று.

    பதிலளிநீக்கு
  17. அன்பின் மதிப்பினை உணர்த்தும் / விளக்கும் அருமையான கதை ஐயா.

    பதிலளிநீக்கு
  18. காலத்தால் அழிக்க இயலாத உணர்வு அன்பு.

    பதிலளிநீக்கு
  19. சூப்பர் சார். எளிமையான வடிவம் அருமையான கருத்து.

    பதிலளிநீக்கு
  20. நிரூபன்
    ரிஷபன்
    கோவை2தில்லி
    Loganathan Gobinath
    நன்றி.

    பதிலளிநீக்கு